ரபிசி: எப்ஜிவி-யைப் பங்குச் சந்தையிலிருந்து அகற்றினால் ரிம7.8 பில்லியன் இழப்பு ஏற்படும்

fgvபெல்டா  குளோபல்   வெண்ட்சர்ஸ்  (எப்ஜிபி)  நிறுவனம்    பங்குச்   சந்தையிலிருந்து     விலகிக்கொண்டால்   அதற்கு   ரிம  ரிம7.8 பில்லியன்   இழப்பு   ஏற்படும்   என   பிகேஆர்   உதவித்   தலைவர்  ரபிசி   ரம்லி   கூறினார்.

இழப்பு    எப்படி    என்றால்,   எப்ஜிபி   பங்குதாரர்களிடமிருந்து   பங்குகளைத்   திரும்ப   வாங்குவதற்கு  ரிம2.9  பில்லியன்   கொடுக்க   வேண்டியிருக்கும்;  எப்ஜிபி-இல்   முதலீடு   செய்த    அரசு   நிறுவனங்கள்   ரிம2  பில்லியனை   இழக்க   நேரும்;  கடன்களுக்கும்    மற்ற   செலவினங்களுக்கும்   எப்ஜிவி   ரிம2.9 பில்லியன்   கொடுக்க    வேண்டியிருக்கும்     என  ரபிசி   விளக்கினார்.

“ஆக,   பங்குச்  சந்தையில்  இருந்தாலும்   இழப்பு,   வெளியேறினாலும்   இழப்பு   என்ற  நிலைதான்   பெல்டாவுக்கு”,  என  இன்று   கோலாலும்பூரில்    செய்தியாளர்  கூட்டமொன்றில்   ரபிசி   தெரிவித்தார்.

பெல்டாவுக்குப்    புதிதாக   நியமனம்   செய்யப்பட்ட    ஷாரிர்   சமட்,   மலேசிய   பங்குச்   சந்தையிலிருந்து   எப்ஜிவியை   வெளியேற்றுவது   குறித்து    ஆலோசிக்கப்படுவதாகக்  கூறியிருந்தது    குறித்து   ரபிசி   கருத்துரைத்தார்.

எப்ஜிவி   2012-இல்   பங்குச்  சந்தையில்   பட்டியலிடப்பட்டபோது   ஒரு  பங்கின்   விலை  ரிம4.55   ஆக   இருந்தது.

அடுத்தடுத்த   ஆண்டுகளில்   அதன்   பங்கு  விலை   தொடர்ந்து   சரிவு  கண்டது.  இன்று  பிற்பகல்   3மணிக்கு   அதன்   விலை   ரிம1.79 ஆக   இருந்தது.