நூர் ஜஸ்லான்: லெவி கட்டண விதிப்பு ஒத்திவைக்கப்படவில்லை

nurஅன்னிய   தொழிலாளர்களுக்கான    லெவி    கட்டணத்தை   முதலாளிகளே  செலுத்த   வேண்டும்   என்ற  புதிய   விதிமுறையை    அடுத்த    ஆண்டுக்குத்   தள்ளிவைக்க    அரசாங்கம்    எண்ணவில்லை.

“முதலாளிமார்கள்    அதை   ஒத்திவைக்க  வேண்டுமாய்க்   கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்,  2013-இல்    கேட்டுக்கொண்டதைப்  போலவே.  அவர்கள்   லெவி   கட்டுவதை  விரும்பவில்லை.     தொழிலாளர்கள்   கொடுக்க   வேண்டுமென   நினைக்கிறார்கள்”,   என   உள்துறை   துணை   அமைச்சர்   நூர்   ஜஸ்லான்   முகம்மட்    மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.

“லெவி    கட்டண  விதிமுறையின்   அமலாக்கத்தைத்   தள்ளிவைக்கும்  முடிவு    எதுவும்   இதுவரை   செய்யப்படவில்லை”,  என்றாரவர்.

லெவி    கட்டணத்தை   முதலாளிகளே  செலுத்த   வேண்டும்   என்ற  புதிய   விதிமுறை   2018வரை   தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக்  கூறும்    செய்தி   குறித்து   நூர்  ஜஸ்லான்   கருத்துரைத்தார்.