மலேசியப் பொருளாதாரம் 4.3விழுக்காடு வளர்ச்சி காணும்: உலகப் பொருளகம் ஆருடம்

bankஉலகப்    பொருளகம்,   2017க்கான   மலேசியாவின்   பொருளாதார   வளர்ச்சி  4.5  விழுக்காடாக   இருக்கும்    என்றும்    அடுத்த    ஆண்டில்   அது   4.5 விழுக்காடாக   உயரும்   என்றும்    ஆருடம்   கூறியுள்ளது.

இவ்வட்டாரத்தில்   உள்ள   மூலப்  பொருள்   ஏற்றுமதி     நாடுகளில்   பொருளாதார   வளர்ச்சி    மேலோங்கும்    என்று    எதிர்பார்ப்பதாக     அப்பொருளகம்  ஓர்    அறிக்கையில்   கூறியது.

“முடிவடைந்த     ஆண்டில்   5.1  விழுக்காடாக   இருந்த   இந்தோனேசியாவின்   பொருளாதார    வளர்ச்சி,  தனியார்   முதலீடுகள்   பெருகியதன்   விளைவாக,   2017-இல்   5.3  விழுக்காடாக    உயரும்   என   எதிர்பார்க்கப்படுகிறது.

“மலேசியாவில்,   குறைந்திருந்த   எண்ணெய்   விலைகள்   மேம்பட்டதாலும்   மூலப்பொருள்  விலைகள்    நிலைப்பட்டிருப்பதாலும்   பொருளாதார    வளர்ச்சி   4.3  விழுக்காடாக    உயரும்   என   எதிர்பார்க்கப்படுகிறது”,  என   அந்த    அறிக்கை   கூறிற்று.