பினாங்கு தைப்பூசத்தில் சாயத்தை ‘ஸ்ப்ரே’ செய்வோருக்கு இராமசாமி எச்சரிக்கை

pusamபினாங்கு   இந்து   அறவாரிய (பிஎச்இபி)  தலைவர்   பி.இராமசாமி,  “தைப்பூசத்தில்   குழப்பம்  விளைவிக்கப்    புறப்பட்டிருக்கும்   ஸ்ப்ரே  கும்பல்”   குறித்து   அடுத்த   வாரம்   போலீசைச்   சந்தித்து    பேசப்   போவதாகக்   கூறினார்.

தைப்பூசத்துக்குப்  பெண்கள்    ஆடை   அணிந்து  வரும்   முறை    என்றும்   ஒரு   பிரச்னையாக     இருந்ததில்லை   என்றாரவர்.

“இப்போது,  திடீரென்று   தங்களைச்   சமூகக்   காவலர்கள்   என்று   கூறிக்கொண்டு   ஒரு  கும்பல்    பெண்கள்மீது    சாயத்தை  ஸ்ப்ரே   செய்ய   விரும்புவது   ஏன்?”,  என்று   பினாங்கின்  இரண்டாவது   துணை   முதல்வரான   இராமசாமி   வினவினார்.

அக்கும்பலை     முரடர்கள்,  கோழைகள்,   தீவிரவாதிகள்    என்று    வருணித்த   இராமசாமி,    அவர்களின்   செயல்    சட்டவிரோதமானது    என்று    எச்சரித்தார்.

அக்கும்பல்  ஹென்ரி  பார்னபாஸ்   என்று   தன்னை    அழைத்துக்கொள்ளும்    ஒருவரால்    முகநூலில்   தொடங்கப்பட்டது.  இன்றுவரை  620  உறுப்பினர்களை   அது   பெற்றுள்ளது.
பிப்ரவரி  9-இல்   கொண்டாடப்படும்   தைப்பூச  விழாவுக்கு     வரும்   பெண்கள்   ஆபாச     ஆடைகளில்   காட்சியளிக்கக்   கூடாதென்று    அது    எச்சரித்துள்ளது.