இஸ்லாத்தை மதிக்காத கிட் சியாங்க்கு அம்னோ மேடையில் இடமில்லை, அனுவார் மூசா

 

Annuar1990களில் நடைபெற்ற வெளிநாட்டு நாணயமாற்று ஊழல்  (ஃபோரெக்ஸ்) விவகாரம் குறித்து விவாதிக்க அம்னோ ஏற்பாடு செய்துள்ள ஒரு விளக்கக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசத் தயார் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருந்தார்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா, பெடரல் அரசமைப்புச் சட்டத்தையும் ருக்குநெகாராவையும் நிலைநிறுத்தாதவரை, ஷரியா சட்டத்தையும் இஸ்லாத்தையும் மதிக்காதவரை கட்சி அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரவேற்பதில்லை என்றார்.

அவரைப் போன்ற அரசியல்வாதிக்கு அம்னோவின் மேடை பொருத்தமானதல்ல. அவர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் அவரது மகனை, பினாங்கு முதலமைச்சரை, தற்காக்க முயற்சிப்பார் என்று அனுவார் கூறினார்.

மேலும், தேசிய அரசியலை டிஎபியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ளும் நோக்கத்தில் கிட் சியாங் மலாய் ஒற்றுமையை வஞ்சமான முறையில் உடைக்க முயற்சிப்பார் என்றாரவர்.