அன்று கஞ்சா வியாபாரி…இன்று சாமியார்! ஈஷாவின் அதிரவைக்கும் மறுபக்கம்


அன்று கஞ்சா வியாபாரி…இன்று சாமியார்! ஈஷாவின் அதிரவைக்கும் மறுபக்கம்

Jaggi Vasudevமடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன் ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் இதோ…

ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்….

கோவை மாநகரில், மாநகராட் சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத் தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும்,இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகியது.

இவரின் மனைவி, மகளையும் அவரே கொலை செய்ததாக மனைவியின் தந்தையால் கொடுக்கப்பட்ட புகாரும் விசாரிக்காமலே நிலுவையில் காணப்படுகிறது. பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

அப்படியே ஒரு 20 வருடம் கழித்து…அதே கிரிமினல் காட்டை அழித்து, யானையின் வழிதடங்களை அழித்து உருவாக்கி இருக்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை தொடங்கி வைக்க நாட்டின் பிரதமரே நேரில் வருகை தருகிறார்… இதுதானா மக்களே ஜனநாயகம்?..

– manithan.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 26 பிப்ரவரி, 2017, 8:35

  சற்குருவானவர் விளம்பரத்தை நாடார். இவர் விளம்பர பிரியர். இதில் பின் நோக்கமும் கலந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு புதிய சாமியார் அல்லது ‘சற்குரு’ என்ற பெயரில் ஒருவர் ஊடகங்களால் திட்டமிட்டு விளம்பர படுத்தப் படுகின்றார் என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நலம் பயக்கும்.

 • komallam wrote on 27 பிப்ரவரி, 2017, 8:18

  இன்றுவரை இவரின் மேல் எனக்கு தீராத சந்தேகம் உண்டு. ஆன்மிக குருமார்கள் விளம்பரத்தையோ ஆடம்பரத்தையோ தேட மாட்டார்கள். அங்கு ஒரு வாசுதேவ் என்றல் இங்கு ஒரு ராஜா யோக சித்தர் என்ற போர்வையில் RM780 குருஜி. மக்களின் அறியாமை வேதனையளிகிறது. பாரம் பொருளை உணர்வதற்கு குறுக்கு வழி கிடையாது. மனதை ஒரு நிலை படுத்துங்கள். தியானம் செய்யுங்கள். இறைவனே குருவாக வழிகாட்டுவார்.

 • en thaai thamizh wrote on 27 பிப்ரவரி, 2017, 11:52

  நேர்த்தி கடனை தீர்க்க தலையில் தேங்காய் உடைக்கும், மடையர்களிடம் பகுத்தறிவை எதிர்பார்க்க முடியுமா? இந்தியாவில் எது ஒழுங்காக நடக்கிறது? அங்கு பணம் பாதாளத்தையும், தாண்டி போகும் — மழைக்காக கும்,மி அடித்து பாடியும், கழுதைக்கும் திருமணம் என்றால் எப்படி? புத்தியின் வழி தீர்க்காமல் மடமையின் வழி சாதிக்க முடியும் என்று நம்புவோரை என்ன செய்வது?

 • மிஸ்டர் ஜோக்கர் wrote on 27 பிப்ரவரி, 2017, 11:56

  வியாச முனிவரின் பின்னணி தெரியுமா?

 • en thaai thamizh wrote on 27 பிப்ரவரி, 2017, 11:56

  தவறு செய்து திருந்தி நல்லது செய்வதில் தவறு கிடையாது. ஆனால் இந்தியாவில் எவனையும், நம்ப முடியாது– அங்கு இந்த சாமியார்கள் பண்ணும் அநியாயத்திற்கு எவனும்,தடை போடுவதில்லை– எவனுக்கும், எதிர்க்கும், தைரியமும் கிடையாது — இவர்களின் பேச்சு கேட்பவரை மயக்கும் முட்டாள்களாக இருந்தால்.

 • மின்னல் wrote on 27 பிப்ரவரி, 2017, 13:29

  அய்யோ தேனீ!!  இணையத்தை கொஞ்சம் எட்டிப்பாருங்கள், ஜக்கி அய்யா தனது உருவத்தையே ஆதிசிவன் வடிவாய் செதுக்கிவைத்திருப்பதை !! முகநூலில் வறுத்தெடுத்துக்கொன்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள் (பாவம் தங்களது ஆற்றாமையை பதிவு செய்ய இதைவிட்டால் வேறேது வழி அவர்களுக்கு !!?)  மனுசன் பயங்கரமான் ஆள்தான், அப்பாவிகளை சிக்ஷ்யர்கள் எனும் பெயரில் தனக்கு அடிமையாக்கிக்கொள்ள மறைமுகமாய் அவர்கள் ஆள்மனதில் தன்னை பிரமாண்டமாய் பதித்துக்கொள்ளும் வெளிப்படையான் சூழ்ச்சி! பாவம் தமிழக மக்கள், அரசியல் தொல்லைகள் போதாதென்று சாதுக்களாலும் சோதனை அவர்களுக்கு !!   

 • loganathan wrote on 27 பிப்ரவரி, 2017, 13:53

  வணக்கம் . நான் இந்த ஈஷா மையத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று நிறைய தகல்வல்கள் படித்தேன் பிறகு youtube இவரின் சொற்ப்பொழிவுகளை பார்த்தேன் . பல பிரபலங்கள் இவரை சந்தித்து உரையாடி உள்ளனர். இதுவரை எந்த சர்ச்சைகளில் மாட்டாதவர் . இப்பொழுது இது ஒரு புதிய தகவல் இது உண்மையா என்று தெரியவில்லை.

 • sgr wrote on 2 மார்ச், 2017, 11:07

  தயவு செய்து கண் ,வாய்,காது இம் மூன்றுக்கும் வேலை கொடுங்கள் .
  நல்லத பார் , நல்லதபேசு ,நல்லத கேள்.

  ஜக்கி அய்யா,அவர்களை பற்றி திரு .ஜெயமோகன் வலை தளத்தில்
  சென்று படிக்கவும் …….அருமையான ,தெளிவான விளக்கங்கள் உள்ளன.

 • sgr wrote on 2 மார்ச், 2017, 11:15

  திரு .ஜெயமோகன் வலை தளத்தில்

  ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1
  ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2

 • sgr wrote on 2 மார்ச், 2017, 11:35

  நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்றால் கேட்டுக் கொள்ள வேண்டிய முதல் கேள்வி இதுதான். இங்கு பல்வேறு தளங்களில் இந்நாட்டின் செல்வத்தைச் சூறையாடி ஊழலில் திளைக்கும் அரசியல் குடும்பங்கள், கட்டைப் பஞ்சாயத்து குறுநில மன்னர்கள், மணற்கொள்ளையர், பாறைத்திருடர்கள் எவருக்கும் எதிராக எழாத இந்த உச்சகட்ட எதிர்ப்பு ஜக்கி மேல் மட்டும் ஏன் வருகிறது? அவர் அப்படி பொதுமக்களுக்கு என்ன தீங்கை இழைத்துவிட்டார்?

 • komallam wrote on 3 மார்ச், 2017, 20:24

  ஒரு திருடன் காவல் அதிகாரியிடம் உலகில் நான் மட்டுமா திருடுகிறேன் நீங்கள் ஏன் மற்ற திருடர்களை கைது செய்யவில்லை என்பது போல் உள்ளது சிலரின் அறியாமை. இந்த நாட்டில் நடுக்கும் அட்டூழியங்கள் எல்லாம் தினமும் தகவல் ஊடகங்களில் தலையங்கத்தை அலங்கரிகிறதே!

 • மலேசியன் wrote on 5 மார்ச், 2017, 19:11

  #LIVE | ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் உரையாடல்…
  நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலையில்.. News18 Tamil Nadu – 5 March, 2017
  LIVE: https://www.youtube.com/News18TamilNadu/லைவ்
  https://www.facebook.com/News18TamilNadu/videos/1142853799156416/

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: