ஜாகிர் நாய்க்கைக் கைதுசெய்து நாடு கடத்துவீர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ஜாகிர் நாய்க்கைக் கைதுசெய்து நாடு கடத்துவீர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

vedaசமூக    ஆர்வலர்கள்     அடங்கிய    குழு  ஒன்று,   சர்ச்சைக்குரிய   சமயப்   பிரசாரகர்   ஜாகிர்   நாய்க்கைக்  கைது   செய்து    நாடு  கடத்த   உத்தரவிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொள்ளும்   மனு   ஒன்றை  இன்று   நீதிமன்றத்தில்   தாக்கல்   செய்தது.

“ஜாகிர்  நாய்க்கை   உடனடியாகக்  கைது    செய்யுமாறு   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீசுக்கு     ஆணையிட    வேண்டுமெனக்   கேட்டுக்  கொண்டிருக்கிறோம்.

“அத்துடன்,   அவருக்கு   நிரந்தர   வசிப்பிடத்   தகுதி    வழங்கப்பட்டிருந்தால்   அதைத்   திரும்பப்   பெற்றுக்கொண்டு    அவரை   உடனடியாக    நாடு   கடத்த    உத்தரவிட    வேண்டும்   என்றும்   கேட்டுக்கொண்டிருக்கிறோம்”,  என   ஹிண்ட்ராப்  தலைவர்   பி.வேதமூர்த்தி  கூறினார்.  வேதமூர்த்தி,   இன்று  மனுவைக்   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றத்தில்   தாக்கல்    செய்த  பின்னர்    செய்தியாளர்களிடம்   பேசினார்.

அம்மனுவை    வேதமூர்த்தியும்   இதர   18  பேரடங்கிய   குழுவும்   தாக்கல்    செய்தது.   அக்குழுவில்   பிங்கோர்   சட்டமன்ற    உறுப்பினர்   ஜெப்ரி   கிட்டிங்கான்,  வழக்குரைஞர்    சித்தி   காசிம்,  கொள்கை  முன்னெடுப்பு   மைய   இயக்குனர்   லிம்   டெக்  கீ  முதலானோர்   இடம்பெற்றுள்ளனர்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • abraham terah wrote on 1 மார்ச், 2017, 17:58

  நீங்கள் சொன்னால் நாடு கடத்திவிடுவார்கள் என்று கனவு காண வேண்டாம்! நாடு கடத்திவிட்டோம் என்று சொன்னால் நீங்கள் நம்பாமாலா போய்விடுவீர்கள்! ஏற்கனவே முஸ்லிமாக மாறியவனை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்!

 • Johnson Victor wrote on 2 மார்ச், 2017, 9:16

  இவர் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து இதுவரை எதிர்ப்புக் குரல் கொடுத்ததில்லை. அதற்கெல்லாம் அமெரிக்கக் கிறிஸ்தவர்களும் யூதர்களும்தான் காரணம் என்று சொல்லி வருகிறார். மேலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தப் பார்ப்பார். உதாரணமாக அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் சரியானதா என்று கேட்டால், அமெரிக்கா ஹீரோஷிமா, நாகாசாக்கியில் அணுகுண்டு தாக்குதல் நடத்தியது நியாயமா என்று கேட்பார். இந்தியாவில் இஸ்லாமியர்களை அந்நாட்டு தேசிய கீதம் பாடக்கூடாது என்று சொல்வார். அவருடைய வாதத்தை வைத்துப் பார்த்தால் மலேசியாவில் யாரும் நம் நாட்டு தேசிய கீதத்தைப் பாட முடியாது.

  சூலு இஸ்லாமியர்களை சபாவில் ஊடுறுவ விட்டதால், பிற்காலத்தில் அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இருந்தது. அதே போல்தான், அவருடைய துர் உபதேசயத்தின் மூலம் பல இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்தால்தான், காலில் சுடுநீர் ஊற்றியது போல் புலம்புவார்கள்.

 • Dhilip 2 wrote on 2 மார்ச், 2017, 11:43

  இது ஒரு மலிவான விளம்பரம் இந்த வேத மூர்த்திக்கு ! கடந்த தேர்தலில் ஹிண்ட்ராய்ப்பிற்கு நம்பிக்கையாய் இருந்த உதய குமார் அவர்களை மறந்து, ஆளும் குடடணியுடம் பல் இளித்து, தமிழனின் தன்மானத்தை தரம்தாழ்த்தி … இன்னமும் சாமி வேலு போல் ஊரை ஏமாத்திரி திரியும் வேத அவர்களே, சாகிர் நாயக் மத தீவிரவாதம் பேசினால், நீங்கள் இன தீவிரவாதம் பேச வில்லையா ? தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கிறது ! கௌருவமாக ஹிண்ட்ராப்பில் இருந்து விலகி அதனை உதய குமாரிடம் தந்து பாவத்திற்கு பரிகாரம் தேடுங்கள். நாங்கள் சாகிர் நாயக்கை கண்டு பிடிப்பவர்களுக்கு 1 லட்சம் அறிவிக்கிறோம், உலக இந்துக்களிடம் இருந்து நன்கொடை எதிர்பார்த்து …..

 • அலை ஓசை wrote on 2 மார்ச், 2017, 13:49

  பாக்கிஸ்தானில் மறைந்து வாழும் தாவுது
  இப்ராகிம் பணம்,மற்றும்அந்தநாட்டு தீவிரவாதிகளின் ஆதரவு இருப்பதால் தான்
  ஜாகிர் நாய்க்கு போருக்கேப்ப ஊழைய்டுது.
  நம்ம ஜ.,ஜி,பிகாலிட் இவனைப்பற்றிவிசாணை
  நடத்த வேண்டும்.இந்தியாவில் இவனுக்கு
  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 • iraama thanneermalai wrote on 2 மார்ச், 2017, 18:31

  சாகிர் நாயக்கிற்கு அறிவு இருக்கிறது .குர் ஆணை மனப்பாடம் செய்யும் திறமை உள்ளது .அவரை நம்புபவர்களும் ஏராளம் .இறைவன் கொடுத்த இந்த வரங்களை அவர் நல்வழியில் பயன்படுத்தி சொர்க்க வாசலை அடையலாம்.எந்தமதத்தை சார்ந்தவர்களும் சமமே என்பதை ஏற்று அதை தன சொற்பொழிவுகளில் தெளிவு படுத்த வேண்டும். உலக அமைதிக்கு அது வழிவகுக்கும். அதை விட்டு தன்னை தானே பெருமைப்படுத்தி மற்றவர்களை இழிவாவாக பேசும்போது அது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதை மெய் படுத்தும் .

 • Imran wrote on 2 மார்ச், 2017, 18:32

  நாங்கள் எப்போ தேசிய கீதம் பாடமாட்டம்ண்டு சொன்னோம் இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள்தான் தவறாக சொல்கிறார்கள்.

 • singam wrote on 2 மார்ச், 2017, 20:03

  alhamdulillah!

 • komallam wrote on 3 மார்ச், 2017, 14:23

  வேத மூர்த்தியின் தேர்தல் நாடகம் அரங்கேற ஆரம்பித்து விட்டது… இப்படி சாகிர் நாயக்கின் மேல் வழக்கு தொடுபட்டது இருக்கட்டும். ஹிண்ட்ராப் – பின் ஒப்பந்தம் தோல்விக்கு இன்னும் பரிசன் மீது வழக்கு தொடுக்காது இருப்பது ஏன் ? அப்படித்தானே சென்ற தேர்தலில் எங்களுக்கு வாக்கு கொடுத்தீர்கள்? மௌனம் சாதிப்பது ஏன் ? மாயா வித்தை காட்டும் மந்திரவாதிபோல் அவ்வப்போது இப்படி எதாவது ஒன்று செய்கிறார். இவருக்கு அறிவு பலம் அதிகம்.

 • மலேசியன் wrote on 13 மார்ச், 2017, 11:14

  India Today Investigation: Zakir Naik’s converts were paid to change beliefs, say aides
  Mumbai/Pune, July 26, 2016 
  http://indiatoday.intoday.in/video/india-today-investigation-zakirs-cash-for-conversion-campaign-exposed/1/724627.html
  http://indiatoday.intoday.in/story/india-today-investigation-zakir-naik-islamic-research-foundation/1/724629.html

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: