“துணைப் பிரதமர் கிட் சியாங்” பெரும் அதிகாரமுள்ளவராக இருப்பார், நஜிப் கூறுகிறார்

 

najibபுத்ராஜெயாவை பின் இழக்க நேர்ந்தால், டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் துணைப் பிரதமராவது நிச்சயம் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

யார் பிரதமராக வேண்டும் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், துணைப் பிரதமர் யார் என்பதில் லிம் மற்றும் மகாதிர் ஆகிய இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று நஜிப் நேற்று சாபா சின்டுமின்னில் பேசிய போது கூறினார்.

இந்த “அலி பாபா” ஏற்பாடு வெற்றி பெற்றால் லிம் நம்பமுடியாத அளவுக்கு சக்தி வாயந்தவராகி விடுவார், ஏனென்றால் யார் பிரதமர் என்பதை அவர் தேர்வு செய்ய முடியும் என்றார் நஜிப்.

“இதில் விசித்திரம் என்னவென்றால் பக்கத்தன் ஹரப்பான் துணைப் பிரதமர் பதவி விவகாரத்தில் மட்டும் ஒப்பந்தம் கண்டுள்ளது, பிரதமர் பதவிக்கு அல்ல. அது யாராக இருக்கும்? வான் அஸிசா? அன்வார்? முகைதின்?

“இன்னும் விசித்திரம் என்னவென்றால் துணைப் பிரதமர் பிரதமரை நியமிப்பார். இது ‘அலி பாபா’. எதிர்க்கட்சி ஓர் ‘அலி பாபா’.

“இது பிஎன்னுடன் ஒப்பிடும் போது கூட்டணி என்ற முறையில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி கண்டுவிட்டது என்பதை நிருபிக்கிறது. பிஎன் அதன் 13 பங்காளித்துவ உறுப்பினர்களிடையே இணக்கம் கண்டுள்ளது”, என்று நஜிப் கூறியதாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.