ஸாகிர் நாய்க் நாடு கடத்தப்பட வேண்டும், டெக் கீ கூறுகிறார்


ஸாகிர் நாய்க் நாடு கடத்தப்பட வேண்டும், டெக் கீ கூறுகிறார்

 

Limittofreedomof speechTeckGheeசர்ச்சைக்குரிய சமயச் சொற்பொழிவாளர் ஸாகிர் நாய்க் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும், ஏனென்றால் பேச்சு சுதந்திரத்திற்கும் வரம்பு உண்டு என்று கொள்கை முன்னெடுப்புகள் மையத்தின் (CPC) இயக்குனர் லிம் டெல் கீ கூறுகிறார்.

“அனைத்து சமுதாயங்களிலும் பேச்சு சுதந்திரத்திற்கு வரம்புகள் உண்டு என்பதை ஒவ்வொருவரும் அறிவர்”, என்று மின்னஞ்சல் வழி மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள பதிலில் அவர் கூறுகிறார்.

“ஸாகிருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை அவர் தொடர்ந்து சமய தீவிரவாதத்தையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரப்புவதிலிருந்து தடுப்பதாகும்”, என்று லிம் விளக்கம் அளித்தார்.

கடந்த வாரம், லிம் இதர 18 பேருடன் சேர்ந்து இந்நாட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் நம்பும் ஸாகிரை கைது செய்து நாடு கடத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் ஒரு சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

காலம் கடந்து விடுவதற்குமுன் அதிகாரிகளும் நமது நாட்டு அரசியல் தலைவர்களும் பகைமையைப் பரப்பும் ஸாகிர் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு எதிராக கதவைச் சாத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணருமான லிம் மேலும் கூறினார்.

தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு தேசநிந்தனையானது என்று பெர்காசா இளைஞர் பிரிவு செய்துள்ள போலீஸ் புகார் பற்றி குறிப்பிட்ட லிம், “நாங்கள் தேசியப் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அழியாது காப்பாற்ற முயல்கிறோம்”, என்றார்.

இஸ்லாமியர் அல்லாத ஒரு சமயப் போதகர் நாடு முழுவதும் பயணித்து பொதுமேடையில் இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பை உண்டாக்கும் மதவெறி கொண்ட பேச்சுகளை பேசினால் அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பார்களா என்பதை பெர்காசா உறுப்பினர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார் லிம்.

ஸாகிர் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலானவர் என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 59 பக்கம் அடங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று லிம் மேலும் கூறினார்.

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • en thaai thamizh wrote on 6 மார்ச், 2017, 20:40

  இந்த நாதாரி இந்த நாட்டில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறானா? சவுதியில் அல்லவா ஒளிந்து கொண்டிருந்தான். இவனைப்போன்ற ஈனங்களுக்குத்தான் இங்கு தங்குவதற்கு எவ்வளவு சுலபம்.

 • seerian wrote on 6 மார்ச், 2017, 20:56

  சர்ச்சைக்குரிய சமயப் பேச்சாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது.அதனால் சமய நல்லிணக்கம் பாதிக்கப்படுவதோடு இனப் பிரச்ச்னையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.ஆகவே ஸாகிர் நாய்க் போன்ற இனவாதத்தை தூண்டும் நபர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் நல்லது.

 • வெற்றி தமிழன் நந்தா wrote on 6 மார்ச், 2017, 23:48

  வெற்றி தமிழன் நந்தா

 • வெற்றி தமிழன் நந்தா wrote on 6 மார்ச், 2017, 23:53

  எதற்கு அந்த பைத்திய காரனை அழைத்து வந்தார்கள் ?

 • PalanisamyT wrote on 7 மார்ச், 2017, 0:16

  1. கருத்துச் சுதந்திரமென்றப் போர்வையில் மற்ற மதங்களைப் பற்றி எதையும் செய்யலாம், பேசலாமென்றால் இதேக் கருத்துக் சுதந்திரத்தை மற்ற மதங்களுக்கும் கொடுக்கவேண்டும். ஆனால் நாமெல்லோரும் நாகரீகம் கருதி மற்ற மதங்களைப் பற்றி இப்படிப் பேசுவதில்லை; பேசவுமாட்டோம்! இதுதான் நம் கலாச்சாரம்.

 • PalanisamyT wrote on 7 மார்ச், 2017, 0:24

  2. எத்தனையோ மதசார்பற்ற நாடுகளில் இந்தியா உட்பட இவர்ப் பேச்சை தடை செய்துள்ளார்கள்; மதசார்பற்ற நாடான நம்மவூரில் இவரப் பேச்சை தடை செய்யவில்லை. அப்படியென்றால் தடைச் செய்த மற்ற நாடுகள் தவறுகள் செய்து விட்டார்களா?

 • PalanisamyT wrote on 7 மார்ச், 2017, 0:35

  3. ஒரு மதத்தை எவனொருவனாலும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தாலும் படித்துமுடிக்கவும் முடியாது; படித்து முடியாதென்றால், கற்று கொள்ளவும்முடியாது. பின் எப்படி பிரமதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அம் மதங்களிலும் இவர்ப் பண்டிதம் பெற்றவரென்று சொல்லமுடியும்! ஒன்றும் புரியவில்லை!

 • PalanisamyT wrote on 7 மார்ச், 2017, 6:23

  4. அங்கொன்றும் இங்கொன்றுமான பிற மதக் கோட்ப்பாடுகளை மேற்க் கோள் காட்டி வேண்டுமானால் மற்றவர்களின் பார்வையில் தன்னைவொரு பிரமதங்களின் ஒப்பற்ற பண்டிதனென்று பறைச் சாற்றிக் கொள்ளலாம்; இவர் மேற்க் கோள்காட்டி உரைக்கு மெல்லாக் கோட்ப்பாடுகளும் உண்மையா, சரியானதுதானா? மேலும் இப்படிப் பட்டவர்களிடம் பொதுவறிவுள்ள எந்தவொரு சராசரி மாந்தரும் வாதிட முடியாது; பேசவும் முடியாது; இப்படிப் பட்டவர்கள் இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்; ஏற்றுக் கொள்ளும் தன்மைப் படைத்தவர்களில்லை; நம் நாடு இந்திய நாட்டைப் போன்று மதச் சார்பற்ற நாடு; பல இன மக்கள், மதங்கள், பலக் கலாச்சாரங்கள் மொழிகள் நிறைந்த நாடென்றுத் தெரிந்தும் இவர் இன்னும் இப்படிப் பொறுப்பில்லாமல், கட்டுப்பாடில்லாமல், கண்ணியமில்லாமல் பேசிக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா?

 • CHAMUNDA wrote on 7 மார்ச், 2017, 6:34

  ஜாகிர் என்பதை விளக்கி அதன் பின் வரும் பெயரில் அவரை அழைப்பதே சிறந்தது .

 • abraham terah wrote on 7 மார்ச், 2017, 10:14

  இவர் இந்த நாட்டிற்கு வந்த பிறகு தான் ஒரு கிறிஸ்துவ சமய போதகர் கடத்தப்பட்டிருக்கிறார். இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. வருத்தமே!

 • miv wrote on 7 மார்ச், 2017, 10:31

  இந்த நா…. ஏன் மலேசியா அரசங்கம் பாதுகாப்பு கொடுக்கிறது?

 • Imran wrote on 8 மார்ச், 2017, 0:39

  இந்தியாவில் உள்ள இந்து வெறியர்களுக்கு பதுகாப்பு கெடுப்பது போல்.

 • தேனீ   wrote on 8 மார்ச், 2017, 9:10

  //ஒரு மதத்தை எவனொருவனாலும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தாலும் படித்துமுடிக்கவும் முடியாது; படித்து முடியாதென்றால், கற்று கொள்ளவும்முடியாது. பின் எப்படி பிரமதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அம் மதங்களிலும் இவர்ப் பண்டிதம் பெற்றவரென்று சொல்லமுடியும்! ஒன்றும் புரியவில்லை!//

  ஒரு கிறிஸ்துவர் தனது மத முதல் நூலான விவிலியத்தைக் கற்றுணர்ந்து அதுவே அவர்தம் வாழ்க்கை நெறிக்கு மார்க்கமென்று அறிந்து வாழ்கின்றார். ஒரு முஸ்லிம் அவர்தம் மத முதல் நூலான திருகுர்ரானையும் ஹடித்தையும் ஓதியுணர்ந்து அதுவே அவர்தம் வாழ்க்கை நெறிக்கு மார்க்கம் என்று அறிந்து வாழ்கின்றார்.

  அப்படியானால் இந்துக்களுக்கு மட்டும் ஏன் அவர்தம் சமய முதல் நூலை கற்றுணர்ந்து அதன் வழி நடக்க முடியாது? வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் படித்து முடிக்க முடியாது என்றால் என்ன காரணம்? இந்துகளுக்கு அவர்தம் மத முதல் நூல் எதுவென்று தெரியாது! தமிழருக்கும் அவர்தம் மத முதல் நூல் எதுவென்று தெரியாது! எதையுமே தெரிந்து வைத்திருக்காமல் நான் இந்துவாகப் பிறந்து இந்துவாகவே இறப்பேன் என்று பெருமிதம் பேசுவதில் மட்டும் தமிழருக்கு குறைவில்லை! மற்ற சமயத்தவருக்கு அறிவுரை கூற புகுமுன் தமிழர் முதலில் திருந்துங்கள். தங்கள் சமய நெறியை அறிந்து வாழுங்கள். அதற்கப்புறம் பிற மதத்தவருக்கு அறிவுரை கூறலாம்.     

 • mannan wrote on 8 மார்ச், 2017, 9:20

  சகஜம் தானே. ……. மத போதகர்களை நம் அரசாங்கம் ஆதரிப்பது. இதுதான் நம் அரசாங்கத்தின் அவலட்சணம்.

 • 'நக்கல்' நக்கீரன் wrote on 8 மார்ச், 2017, 10:42

  மலேசியா இஸ்லாமிய வெறியர்களுக்கு பதுகாப்பு கொடுக்கும்போது, இந்தியா இந்து வெறியர்களுக்கு பதுகாப்பு கொடுப்பதில் தவறில்லையே.

 • en thaai thamizh wrote on 8 மார்ச், 2017, 12:31

  ஐயா imran அவர்களே – இந்தியாவில் உங்களவர்கள் -பெரும்பாலான இடங்களில் – மற்ற உங்களவர் நாடுகளில் இல்லாத சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்பதே உண்மை– அநியாயங்களை யார் செய்தாலும் தவறே இந்துக்களையும் சேர்த்தே . ஆனால் நீதி நியாயம் எங்கு நிலை நிறுத்தப்படுகிறது? சவுதியில் இந்து கோவில் கட்டமுடியுமா? பெரும்பாலான உங்களவர்கள் நாடுகளில் மற்ற சமயத்தினர் அனுபவிக்கும் அநியாயங்கள் எவ்வளவு? இங்கு எத்தனை கோவில்கள் உடைக்கப்பட்டு இருக்கின்றன? மத மாற்றம் எந்த நிலையில் இருக்கின்றது இங்கு? அங்கு எப்படி? மற்றும் 1957 ல் இந்த நாடு இவ்வளவு மத வெறியிலா இருந்தது? அப்போது கலப்பு திருமணம் இருந்தது– மதம் மாறாமல். மதம் மாறினாலும் பத்திரிகையில் அறிவித்து விட்டு மதம் மாறலாம். இன்னும் எவ்வளவோ. தற்போது உலகமே தலை கீழாக இருக்கிறது எல்லாம் யாரால்? காஷ்மீரில் என்ன நடக்கிறது? என்னைப்பொறுத்தமட்டில் அங்குள்ள அரசுக்கு விதை இல்லை. பகுத்தறிவுக்கு நாம் வேலை கொடுக்க வேண்டும்– பரந்த எண்ணம் இருக்க வேண்டும். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அங்குள்ளவர்கள் ஏன் சவுதிக்கு இல்லாமல் ஐரோப்பாவுக்கு ஓடுகின்றனர்?

 • Imran wrote on 8 மார்ச், 2017, 17:25

  அவ்வாறு இறுப்பின் இந்தியாவில் உடைக்கப்பட்ட பாபர் மசூதிக்கு தீர்ப்பு கிடைத்திருக்க வேண்டும் ஜனநாயகமாக இருந்தால்.

 • PalanisamyT wrote on 9 மார்ச், 2017, 15:38

  1. அய்யா தேனீ அவர்களே, ஒருவன் மேடையிலேறி குடிகாரன் குடிப் போதையில் பேசுவதுப் போன்று இவனும் மதப் போதையில் எதை எதையோ உளறிக் கொண்டு பேசுகின்றான்; மஞ்சட் காமாலை நோய்க் கண்டவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாம்; அப்படித்தான் இவனும் பேசுவதுப் போற் றோன்றுகின்றது. 2. யான் கூறியது அறிவுரையில்லை; தெளிந்த நிலையில் அறிந்த உண்மைகளை சொன்னேன். 3. மற்ற மதங்களின் வாழ்க்கை நெறி முறைகளைப் பற்றி பேசுகின்றீர்கள். அதுவும் தெளிவாகச் சொல்கின்றீர்கள்; நம் சமய நெறிகளை நாமறிந்து வாழ வேண்டுமென்றும் சொல்கின்றீர்கள்; ஆதலால் மற்ற மதங்களின் நெறிகளையும் நாம் கடைப் பிடிக்க வேண்டிய நம் சமய நெறிமுறைகளையும் தெளிவாகச் சொல்லிவிட்டால் நாங்களும் தெரிந்துக் கொள்கின்றோம். முடிந்தால் அதன்படியே முயற்சிக் செய்து வாழக் கற்றுக் கொள்கின்றோம்!

 • தேனீ wrote on 9 மார்ச், 2017, 19:51

  வணக்கம் ஐயா. மற்ற மதத்தினரை நாம் குறை சொல்லும் முன் நாம் நமது சமய நெறிகளை அறிந்து வாழ வேண்டுமென்று தமிழர்களிடம் மன்றாடுகிறேன். ஆனால் நல்லதை கேட்பதை விட தமிழரை வைதீக நெறிக்குத் திசை திருப்புவதை கடப்பாடாகக் கொண்ட தமிழரில் ஒரு பகுதியினர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தமிழர் தமது சமய நெறி எதுவென்று அறியாது வாழ்தல் நம் முதல் குற்றமாகின்றது.

  நமது சமய முதல் நூல் எதுவென்று கற்றோர் மத்தியில் கேளுங்கள், அவர் உடனே ஆரிய வேதங்கள் என்று சொல்லுவார்.

  ஆனால் அந்த ஆரிய வேதங்கள் இந்நாள் வரையில் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லையே! அது ஏன்? என்று எந்த தமிழராவது கேட்டதுண்டா? இது நாள் வரை கேட்டது இல்லை. இதற்கு காரணம் தமிழரில் பெரும்பாலோர் அவர்தம் சமய நெறி அறிந்து சமய வாழ்க்கை மேற்கொள்வதில்லை. அதனைப் பயன்படுத்தி ஆரிய வயப்பட்டத் தமிழர், ஆரிய வேதமே தமிழருக்கு முதல் நூல் என்று நமக்குப் பாடம் போதிப்பார். தமிழ் மொழி அறியாத தமிழரும் அதனை ஆமோதிப்பார்.

  ஆரிய வேதங்கள் கோயில் கட்டி இறைவன் திருமேனி நிறுவி பூசை புனஸ்கரங்களை மேற்கொள்ள விதிகளை வகுத்துள்ளனவா என்று அவரிடம் கேளுங்கள். அத்தகையோர் விடை தெரியாமல் விளிப்பவார் அல்லது மழுப்புவார். .

  ஆரிய வேதங்கள் திருமேனி வழிப்பாட்டை மறுக்கின்றன. அப்புறம் எப்படி திருமேனி வழிப்பாட்டைக் கொண்ட தமிழருக்கு ஆரிய வேதங்கள் முதல் நூலாகும்?

  பிராமணர் அல்லாதோர் வேதம் ஓத தகுதி அற்றோர் என்று கூறுகின்றது வைதீக வர்ணாசிரம நியதி. இதில் சூத்திரர் அதாவது நம்மைப் போன்றோர் வேதம் கற்க முடியாது. அதனால்தான் அவை தமிழில் மொழிபெயர்த்துத் தரப் படுவதில்லை. தமிழருக்கு இது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இல்லையா?

  நாம் திருமேனி வழிபாடுகளை மேற்கொள்ள விதிகளை வகுத்துக் கூறுவது சிவாகமங்கள். சிவாகமத்தின் ஞான பாதம் (அறிவு நெறி) சித்தாந்த சாத்திரம் எனப்படும். இச்சாத்திரமே, ஆரிய வேதங்கள் உலகறிவை (அபரஞானம்) மட்டுமே அளிக்க வல்லது என்றும் பரஞானத்தை (இறைவனை அறியும் நெறி) அளிக்க வல்லது சிவாகமமே என்றும் வலியுறுத்திக் கூறுகின்றது. அதனால் வேதம் பொது என்றும் ஆகமம் சிறப்பு என்றும் வழங்கப் பெறுகின்றது.

  அப்படியானால் திருமேனி வழிபாடு மேற்கொள்ளும் தமிழருக்கு சிவாகமமே இறைவனின் முதல் நூலாகும். தென்புல வைணவருக்கு அவர்தம் முதல் நூலான பாஞ்சராத்திரம் என்னும் தந்திர நூல் உள்ளது. இதனை அறிந்த தமிழர் எத்தனை பேர்? மலேசியவாழ் தமிழரில் சமய நெறி அறிந்து வாழ்வோர் 5%-க்கும் குறைவாகவே இருப்பர்.

  சிவாகமத்தின் அறிவு நெறியை தொகுத்து, முறைப்படுத்தி விரித்துத் தமிழில் கூறுவதே மெய்கண்ட சாத்திரங்கள் எனப் படும் 14 நூல்கள். இவ்விரு நூல்களும் இறை நெறியையும், ஆன்ம பக்குவம் பெற வேண்டி நாம் செயல்பட வேண்டிய வழிமுறைகளையும் தெளிவிக்கும். இதனை இறை பத்தியோடு இணைத்துக் கூறுவது நமது திருமுறையாகும்.

  எத்தனை தமிழர் மெய்கண்ட சாத்திரங்களைக் கற்றுணர்ந்துள்ளனர்? எத்தனை தமிழர் திருமுறையை பொருளுணர்ந்து ஓதுகின்றனர்? எத்தனை தமிழர் அவர்தம் சமயம் காட்டும் வாழ்வியல் நெறி என்னவென்பதை அறிந்துள்ளார்? ஏதும் அறியாத தமிழரை இந்து மதம் என்ற பல நெறிகள் கொண்ட வழியில் நம்மை இட்டு செல்வது யார்? இதுநாள் வரை தமிழரின் கண்ணைக் கட்டி இருட்டினில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் இந்துமத தலைவர்கள். தமிழரும் இன்றுவரை அவர்தம் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. தமிழர் விழிக்காத வரை வைதீகர்களுக்கு வெற்றியே.

  மேற்கூறிய சாத்திரங்களையும், தோத்திரங்களையும் கற்றுணர்ந்து நாம் மனம், வாக்கு, செயலால் தூய்மைப் பெற்று இறைவனை சார்ந்து நிற்பதே நமது சமய நூல்கள் காட்டும் வாழ்வியல் நெறி. இதை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு படிமுறைகளில் அடைய வேண்டும். அதற்கு தமிழில் உள்ள நமது சமய நூல்கள் போதுமானவை. இவற்றை தக்க குரு வழிகாட்டுதலால் கற்றுணர்ந்து தெளிவு பெற்றோமானால் நம்மை எவரும் மதம் மாற்ற இயலாது. பிற மதத்தவருக்கு நாம் நல்வழியைக் காட்ட முடியும்.

  ஜக்கீர் நாயக்கும் நம்மிடம் சித்தாந்த பாடம் கற்றுக் கொள்ள முன் வருவார். அந்த அளவுக்கு ஓர் தெளிவான இறை நெறியை கையில் வைத்துக் கொண்டு இன்று வரை அறியாமையில் அல்லலாடுவோர்தான் மலேசியவாழ் தமிழர்.
  திருந்துவோம். நல்வழிப்படுவோம். சிவசிவ.

 • RSS MALAYSIA wrote on 9 மார்ச், 2017, 20:27

  5000 வருடத்திற்கும்  மேலான சரித்திரத்தை கொண்டுள்ள இந்து இடத்தில் 1400 வருடமே ஆகும்  இஸ்லாத்தின் பாபர் மசூதி உருவானது எப்படி ? 3600 ஆண்டுகள் பின் தங்கிய மதமான இஸ்லாம் எப்படி  பாபர் மசூதி இடத்தை உரிமை கூறலாம். மதவெறியர்கள் புரிந்த பாபர் மசூதி போன்ற சரித்திரகால சின்னங்களை அழிப்பதில் தவறில்லை.  

 • காஷ்மீர் இம்ரான்  wrote on 9 மார்ச், 2017, 21:22

  காஷ்மீரில் என்ன நடக்கிறது? 
  இந்திய-பாகிஸ்தான் காஷ்மீரி பிரிவினையில் இந்த இரு  நாட்டையும் சாராமல் தனி நாடாகவே இருக்க காஷ்மீர் அரசு விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி காஷ்மீரின் சில பகுதிகளை கைப்பற்றியபோது காஷ்மீர் அரசு இந்தியாவின் உதவியை நாடியது. பிறகு காஷ்மீர் அரசு இந்தியாவுடன் இணைய இணக்கம் காணப்பட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுத்து  பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதியிலிருந்து சிலவற்றை மீட்டது.
  காஷ்மீர் எந்த நாட்டுடன் இணைவது என்று காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பாகிஸ்தான் அத்துமீறி காஷ்மீரில் கைப்பற்றிய பகுதியிலிருந்து முழுவதுமாக வெளியேறினால் மட்டுமே  காஷ்மீர் மக்கள் வாக்கெடுப்புக்கு இந்தியா ஒப்பு கொள்ளும் என்று கூறப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை.  அதேபோல் இந்தியாவும் மூன்றாம் தரப்பு காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவதை சம்மதிக்கவில்லை 
  இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த மாநிலத்தை ஆண்ட முஸ்லீம் மன்னர்  பிரிவினையின்போது மக்கள் வாக்கெடுப்பு நடத்தாமல் பாகிஸ்தானோடு இணைந்தார்.
  முஸ்லிமுகள் அதிகமாக வாழ்ந்த  காஷ்மீர் மாநிலத்தை ஆண்ட இந்து மன்னர் மக்கள் வாக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவுடன் இணைந்தார். 
  இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த மாநிலத்தை ஆண்ட முஸ்லீம் மன்னர் பாகிஸ்தானோடு இணைந்ததிற்கு இந்தியா மதிப்பளித்ததைபோல்  பாக்கிஸ்தானும் காஷ்மீர் மன்னர் முடிவுக்கு மதிப்பளித்து காஷ்மீரில் அத்துமீறி கைப்பற்றிய பகுதிகளிருந்து வெளியேற வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை. 

 • Imran wrote on 9 மார்ச், 2017, 22:48

  அதே போன்று 200வருடங்கள் ஆன கோயிலை இடிப்பதில் தவறு இல்லை .

 • தேனீ   wrote on 10 மார்ச், 2017, 9:36

  ஒருத்தர் கோயிலை இடியுங்கள். இன்னொருத்தர் மசூதியை இடியுங்கள். இதுதான் அவரவர் சமயம் சொல்லிக் கொடுத்த பாடமாக்கும்!.   

 • abraham terah wrote on 10 மார்ச், 2017, 10:20

  விடுங்கப்பா! ஆஸ்பத்திரிக்கு போனாங்க! புகுந்தாங்க! 30 பேரை சுட்டுத் தள்ளுனாங்க! அவ்வளவுதான் மனித உயிர்! மனிதமும் இல்லை! மனிதாபிமானமும் இல்லை! இதுல என்னா சிறுசு, பெரிசு!

 • PalanisamyT wrote on 11 மார்ச், 2017, 23:55

  1. காஷ்மீர் இம்ரான் அவர்களே, உங்கள் தகவல் சரியானதுதானா? காஷ்மீரைச் சுற்றி நான்கு நாடுகள்; காஷ்மீர் தனி நாடாகயிருந்தால் நாளை இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்புப் பிரச்னையாயிருக்கும்; ஆதலால், அன்று நேரு அவர்கள் நல்ல நோக்கத்த்தோடு காஷ்மீர் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவேண்டுமென்றார். இதுதான் உண்மை. 2. அன்றும் இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றுதான்; ஆனால், இந்தியா இலங்கையிடம் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் பொறுப்பற்ற முறையில் தவறாக நடந்துக் கொண்டார்கள். மனிதாபமற்ற முறையில் இலங்கைக்கு சாதகமாக நடந்துக் கொண்டார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் தனி நாடுப் பெறுவதையம், அரசியல் காரணங்களுக்காக அவர்கள் சுயாட்சிப் பெறுவதையம் இந்தியா முற்றாக விரும்பவில்லை. இதுதான் இன்று இந்தியாவின் எழுதப் படாத வெளியுறவுக் கொள்கை. காஷ்மீரில் நல்ல நோக்கம்; ஆனால் இலங்கையில் தமிழர்கள் விவகாரத்தில் இன்றும் ஏதோவொரு உள்நோக்கத்தோடு செயல்படுகின்றார்கள். நீங்கள் இந்தியாவின் எந்தக் கோரிக்கைப் பற்றி பேசுகின்றீர்கள்; அவர்களிடம் ஏது தெளிவானாக் கோரிக்கை!

 • PalanisamyT wrote on 17 மார்ச், 2017, 17:42

  இன்று வந்த இந்திய நாட்டுச் செய்தியைக் பார்த்தீர்களா? ‘சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு தடை விதித்த, இந்திய அரசின் உத்தரவு சரியானதே’ என, டில்லி ஐகோர்ட், உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் ஐ.ஆர்.எப்., எனப்படும், இஸ்லாமிக் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார். இவரது போதனைகள் பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இவரது அமைப்புக்கு, இந்திய அரசு தடை விதித்தது”. இவர் மேலுள்ள இன்னொருக் குற்றச் சாட்டு – இவர் சட்ட விரோதமானக் காரியங்களில் ஈடுபட்டுள்ளதை – அதாவது சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் மேலும் அமலாக்கத்துறையும் வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்திய அரசு கொண்டுவந்த இந்தக் குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் இந்த மகானின் பதிலென்ன? தன் மதத்தின் புனிதத்தன்மையையும் கெடுத்து, கேவலப்படுத்திய இவனெல்லாம் மதப் போதனையில் ஈடுப் படலாமா? இவனுக்குப் பின்னாலும் ஒருப் பைத்தியக்காரக் கூட்டம்!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: