வடகொரியாவின் தொடர் அதிரடி ஏவுகணை சோதனையை தொடர்ந்து அவர்கள் செய்த வேலையை பாருங்கள்!


வடகொரியாவின் தொடர் அதிரடி ஏவுகணை சோதனையை தொடர்ந்து அவர்கள் செய்த வேலையை பாருங்கள்!

north_korea_flag_001ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தியது. ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை கோப்பு படம் பியாங்யாங்: வடகொரியா சமீபத்தில் 2 அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் அறிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா கண்டு கொள்ளவில்லை. ராணுவ அதிகாரிகளுடன் வட கொரிய அதிபர் கிம்ஜாங்-யங்.

இந்த நிலையில் அதி நவீன சக்தி வாய்ந்த ராக்கெட் என்ஜின் பரிசோதனையை வடகொரியா நடத்தியது. தனது சொந்த முயற்சியில் விண்ணுக்கு செயற்கை கோள்களை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சியாக அது கருதப்படுகிறது. நேற்று நடந்த ராக்கெட் என்ஜின் பரிசோதனையை வடகொரியாவின் ராக்கெட் தொழிற்துறையில் புதிய உருவாக்கம் என அதிபர் கிம் ஜாங்-யங் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்று அந்நாட்டு வெளியுறவு மந்திரியை சந்தித்தார்.

வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை இரு நாடுகளும் இணைந்து சமாளிப்போம் என உறுதி அளித்தார். இத்தருணத்தில் வட கொரியா ராக்கெட் என்ஜின் பரிசோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.

-http://www.athirvu.com

 

 

 

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: