சும்மாத்தான் போட்டியிட்டாராம், தோற்றுப்போன நிக் அப்டு கூறும் சமாதானம்

nik abduபெங்காலான்  செப்பா   பாஸ்   தொகுதித்   தேர்தலில்   போட்டியிட்டு   படுதோல்வி   அடைந்த    நிக்   அப்டு    நிக்    அப்துல்    அசிஸ்    தாம்   விளையாட்டாகத்தான்   போட்டியிட்டதாகக்   கூறினார்.

ஒரு  காலத்தில்   பெங்காலான்   செப்பாவுக்குத்   தலைவராக   இருந்தவர்   காலஞ்சென்ற   அவரின்   தந்தையும்  பாஸ்  ஆன்மிகத்   தலைவருமான      நிக்   அப்துல்     அசிஸ்    நிக்   மாட்    என்பது    குறிப்பிடத்தக்கது.

பாஸ்   இளைஞர்   தலைவரான   நிக்   அப்டுவுக்கு  அத்தொகுதி   துணைத்   தலைவர்   போட்டியில்   37   வாக்குகள்தான்   கிடைத்தன.  ஆனால்,  நடப்புத்   துணைத்    தலைவர்   இஸானி   உசேனுக்கு  209  வாக்குகள்   கிடைத்தன.

தேர்தலுக்குப்    பின்   நிக்   அப்டுவை    நேர்காணல்    கண்ட   உத்துசான்   மலேசியா,      அவரது   தோல்வியை     பார்டி   அமனா    நெகரா   கொண்டாடுவதுபோல்    தெரிவதாகவும்    அது   குறித்து    அவரது   கருத்தையும்   வினவியது.

“என்னைப்   பழிப்பவர்கள்   தற்காலிகமாக   கொண்டாடட்டும்.  நான்  விளையாட்டாகத்தான்   போட்டியிட்டேன்.  எனக்கு  இருக்கும்  பதவி(இளைஞர்   தலைவர்)யே   போதும்.  அவ்வளவு   வேலை”,  என்றார்.