15 வயதில் ரஷ்யாவின் கவனத்தை ஈர்த்த தமிழன்

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் விவசாய நிலங்களை விட வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளே அதிகம்.

அதிக ஆபத்தினையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் ரசாயன பொருள்களை பயன்படுத்தி உருவாக்கும் போது எதிர்பாராத விதமாக அடிக்கடி தீ விபத்துகளும் நிகழ்வதுண்டு.

இதனால் அதிகமாக பொருள்சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதம் கூட ஏற்படுகிறது.

இதற்காக தீர்வாக விருதுநகர் மாவட்டம் நாரணாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்கும் இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.

பட்டாசுகள் சேமிக்கப்படும் குடோனில் இந்த இயந்திரத்தினை பொருத்திவிட்டால், தீவிபத்து ஏற்படும் போது அறை வெப்பநிலை அதிகமாவதை உணர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும்.

தீயினை அணைப்பதற்காக இந்த கருவியுடன் மணல் தொட்டியும் அமைக்கப்பட்டிருக்கும்.

அலாரம் ஒலித்தவுடன் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் விசிறியின் உதவியால் தீ மீது மணலை வீசி அணைக்கலாம்.

இந்த திட்டத்தினை கண்டு ஜெயக்குமாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவசுப்ரமணியம், இங்கர்சால், உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

ஸ்பேஸ்கிட்ஸ் என்னும் நிறுவனம் இவருக்கு இளம் விஞ்ஞானி என்னும் விருதினை அளித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலமாகதான் ஜெயக்குமார் ரஷ்யாவில் உள்ள அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு செல்ல உள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார், மாதம் இரண்டு விபத்தாவது நடந்துவிடும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் உயிரை வாங்க முடியாது அல்லவா?

இதற்கு தீர்வு காணப்பதற்காக தனது அறிவியல் ஆசிரியர் கருணைதாஸ் உதவியுடன் இக்கருவியினை கண்டுபிடித்தாகவும், சாலை விபத்தினை தடுக்கும் கருவியினை உருவாக்குவதற்காக முயற்சிப்பாதாகவும் கூறியுள்ளார்.

-http://newstig.com

TAGS: