கற்பழிப்பிற்குப்பின் கல்யாணம்: தீர்ந்தது சமூகப் பிரச்சனைகள், பிஎன் எம்பி கூறுகிறார்

 

Rapevictimtomarryகற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் கற்பழித்தவனுக்கும் திருமணமாகிவிட்டால் அது சமூகப் பிரச்சனைகளுக்கு ஒரு சாத்தியமான தீர்வாக அமையும் என்று ஒரு பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மக்களவையில் கூறினார்.

கற்பழிப்பு ஒரு கிரிமினல் குற்றம் என்று கூறிய அந்த பிஎன் எம்பி ஷாபுடின் யாஹயா (பிஎன் – தாசெக் கெலுகோர்), கற்பழிக்கப்பட்டவரை கற்பழித்தவர் திருமணம் செய்துகொள்வதைச் சட்டம் தடுக்கவில்லை என்றார்.

திருமணம் கற்பழிப்பு குற்றவாளி நாளடைவில் திருந்தி நல்லவனாக வகைசெய்யும்; கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கணவன் கிடைத்தது பாக்கியமாகும் என்றாரவர்.

திருமணம் அந்த மனிதனை ஒரு வேறொரு நல்வழிக்கு இட்டுச்செல்லும். கற்பழிக்கப்பட்ட அந்த மனைவி நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

“எப்படியோ அந்தப் பெண்ணுக்கு ஒரு கணவன் கிடைத்தான்…சமூகப் பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வு”, என்று அந்த பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாய்மலர்ந்தார்.