காலமானார் சிவனடியார் ஆறுமுகசாமி

arumugasamyநந்திக்கு வெளியே நந்தனாரை நிறுத்தியவர்கள்தான்

நந்திக்கு வெளியே தேவாரத்தையும் நிறுத்தினார்கள் !

நடராஜர் என்னும் சிவனைப்பற்றி தமிழில் பாடப்பட்ட அற்புதமான ஒரு தொகுப்பு தேவாரம். திருமந்திரம் என்ற அதி அற்புதமான அறிவுநூலை எழுதி வெளியிட்ட திருமூலரின் இடமும் சிதம்பரமே…

அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள ஆடல் நாயகன் நடராசர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடியவர்களை அடித்து உதைத்த தில்லை வாழ் தீட்சிதர்கள், சமஸ்கிருதம்தான் நடராஜருக்கு தெரிந்த மொழி (!) என்று வாதிட்டு இன்றுவரை சமஸ்கிருதத்திலேயே பூசைகள் செய்து வருகின்றனர்.

தட்டி கேட்டால்…ஆயுதம் தாங்கவும் (!) தயங்குவதில்லை தேவலோகத்தில் இருந்து நேரே பூமிக்கு வந்த அந்த தில்லைவாழ் தீட்சிதர்கள்.

அவர்களின் வாதம் இதுதான், தேவாரம் பாட நாங்கள் தடை சொல்லவில்லை..ஆனால் நந்திக்கு வெளியே நின்று பாடிவிட்டு போகட்டும். சிற்றம்பல மேடையிலும், கர்ப்பகிரகத்தின் உள்ளும் சமஸ்கிருதத்தில்தான் நாங்கள் பூசைகள் செய்வோம் என்பதே தீட்சிதர்களின் வாதம்.

ஆனால், சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுதல் எமது உரிமை. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியே உயிர் துறப்பேன் என்று போரிட்டவர் ஆறுமுகசாமி.

அந்த ஆறுமுகசாமி அவர்கள் இன்று காலமானார்.

ஆறுமுகசாமிகள் போராடுவது…தனிநாடு கேட்டு அல்ல…தமிழில் பாடல் பாடமட்டுமே…அதுவும் தமிழ்நாட்டில் !

– விஷ்வா விஸ்வநாத்

-facebook.com

TAGS: