சித்தி காசிம்: இந்தியர்கள் இங்கு நாடற்றவர்களாக இருக்கையில், ஸக்கீருக்கு ஏன் பிஆர் தகுதி?

 

whyzakirprசமயப் போதகர் ஸக்கீருக்கு நிரந்தர தங்கும் தகுதி (பிஆர்) வழங்கியதற்காக வழக்குரைஞர் சித்தி காசிம் அரசாங்கத்தைச் சாடியுள்ளார்.

பல்லாண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் 300,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று அவர் ஃபிரி மலேசியாவிடம் கூறினார்.

அந்த 300,000 இந்தியர்களுக்கு பிஆர் தகுதி மட்டுமே இருக்கிறது. அப்படி இருக்கையில் பிஆர் தகுதி கொடுத்து ஏன் இன்னொரு இந்தியரை (ஸகீர்) அதில் சேர்க்க வேண்டும் என்று அவர் வினவினார்.

மார்ச் 1 இல், சித்தி காசிம் மற்றும் 18 தனிப்பட்டவர்கள் சமயப் போதகர் ஸகீருக்கு இடமளித்ததற்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஸக்கீர் பொதுமேடையில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுகிறார். அவர் நாட்டில் இருப்பது மலேசியாவின் பாதுகாப்புக்கு பெரும் மிரட்டலாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தேடப்பட்டு வரும் ஒரு மனிதருக்கு நிரந்தர தங்கும் தகுதி அளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று சித்தி மேலும் வினவினார்.

 

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • Dhilip 2 wrote on 19 ஏப்ரல், 2017, 10:05

  அட விஜய் மல்லையாவையே இந்தியா கைது பண்ணிருச்சு … இவன் எம்மாத்திரம் ?

 • RAHIM A.S.S. wrote on 19 ஏப்ரல், 2017, 11:07

  வாய்ப்பு கிடைச்சிட்டுன்னு அரசாங்கத்தை சாடாதீங்கமா.
  அல்தான்துயா கொலை வழக்கில் குற்றவாளியான ஷைருலுக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்கும்போது, ஸக்கீருக்கு எங்கள் அரசாங்கம் அடைக்கலம் தருவது தப்பா ?
  ஸக்கீர் என்ன கொலையா செய்து விட்டார் ? பயங்கரவாதத்தைதானே தூண்டிவிடுகிறார் என்று நாடாளுமன்றத்தில் BN எம்பிக்கள் ஸக்கீரை தற்காக்க தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துவிட போகிறார்கள்.

 • en thaai thamizh wrote on 19 ஏப்ரல், 2017, 11:35

  விஜய் மல்லையா இந்தியாவுக்கு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. காலம் தான் பதில் சொல்லும்.

 • en thaai thamizh wrote on 19 ஏப்ரல், 2017, 12:06

  இந்தியா எதையும் ஒழுங்காக செய்வது கிடையாது. அவ்வளவு ஊழல் அங்கு — அதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகி விட்டது. இன்றுவரை கோடிகோடியாக சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணம் இந்தியா வரவில்லை. 3 ன்றே மாதங்களில் பணத்தை கொண்டுவருவேன் என்று கூறிய மோதி இன்றுவரை ஒன்றையும் புடுங்க முடிய வில்லை. எவ்வளவு பேர் மத்திய கிழக்கில் ஆதரவற்ற வர்களாக துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்? இந்தியா அதை எல்லாம் பற்றி அக்கறை கொள்வது கிடையாது. வேண்டா வெறுப்புடன் சிலவற்றை செய்யும் அவ்வளவுதான். இந்திய மீனவர்களை கொன்ற இத்தாலியர்கள் இப்போது எங்கே? இன்னும் எவ்வளவோ. அங்கு பணம் பதவி இருந்தால் தான். மேற்கத்தியர்களுக்கு அவர்களில் ஒருவருக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே நடவடிக்கை எடுப்பர். தற்போது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? தண்ணீர் இல்லாமல் தினசரி போராட்டம் ஆனால் அரசியல்வாதிகள் பணத்தோடு அரசியல் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.ஈன ஜென்மங்கள்.

 • மின்னல் wrote on 19 ஏப்ரல், 2017, 12:13

  வழக்குரைஞர் சித்தி காசிம் இடம் பொருள் ஏவல் அறிந்து சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான இடத்தில் வெளியிட்டிருக்கிறார். பாராட்டுக்கள். 

 • மு.ப.கரிகாலன்  wrote on 19 ஏப்ரல், 2017, 12:25

  ஒரு நாட்டு அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் ஒரு பயங்கரவாதிக்கு மிகவும் சுலபமாக நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை கொடுத்த இந்த அரசாங்கம் மூன்று தலைமுறையாக உழைத்து உருக்குலைந்து போய் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் படாத பாடுபட்ட இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை அந்தஸ்தை வழங்காமல் படம் காட்டிக்கொண்டிருக்கிறது.இதுதான் இனவாதம் என்பது.உலகில் பல நாடுகளில் இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுக்க மாடடார்கள். மலேஷியா மட்டும்தான் இந்த சாதனையை புரிந்திருக்கிறது.இதன் மூலம் இங்கு பயங்கரவாதத்துக்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிடடார்கள்.எதிர்காலத்தில் அமைதி பூங்காவாக இருக்கும் இந்த பூமியை ஒரு ஆப்கனிஸ்தானாக உருவாக்க முயறசி செய்கிறார்களோ? என்னவோ.

 • s.maniam wrote on 19 ஏப்ரல், 2017, 13:41

  தமிழனுக்கு ,குறிப்பாக இந்துக்களுக்கு,இந்தியர்களுக்கு ! இல்லாத அக்கறை நம்ம சித்திக்கு இருப்பதை கேட்க்கும் போது பெருமையாக இருக்கிறது !! நம்ம ஜனங்கள் வெந்ததை தின்று வேளை வந்தால் சாகும் கூட்டம் !! விஜய் மல்லையா நமக்கும் ,நமது நாட்டிற்கும் தேவை இல்லாதவன் ! பணம் படைத்தவன் ! இவன் நாம் பிறந்த மண்ணில் நம்மையும் நமது பண்புகளையும் , மதத்தையும் இழிவு படுத்தி பேசுவதில்லாமல் ,சவால் விட்டு கொண்டிருக்கிறான் ! நமது தானை தலைவன் ! மக்கள் தலைவன் ! புரட்சி தலைவன் ! எல்லாம் ,ம …… று புடுங்கி !! கொண்டு இருக்கிறார்கள் !! நமது மானத்தை காக்கும் சங்கங்களும் ! அரசாங்கத்தின் கட்டளைக்கு காத்திருக்கிறார் கள் !!

 • Dhilip 2 wrote on 19 ஏப்ரல், 2017, 15:40

  en thaai thamizh அவர்களே , நான் இந்தியாவின் அரசியலையும் கவனிக்க தவறுவதில்லை … அரியானா முன்னாள் முதல்வர் 30 கோடி ஊழலில் சாட்சியுடன் மாட்டி 10 ஆண்டுகள் சிறை வாசம் என்றதும், தன் பினாமில் பேரில் ஒளிவைத்திருந்த 10 ஆயிரம் கோடிகளை அப்படியே பிடுங்கியது இந்தியாவின் மோடி அரசு ….ஜெயலலிதா 60 கோடி ஊழலில் சாட்சியுடன் மாட்டி 5 ஆண்டுகள் சிறை வாசம் என்றதும், தன் பினாமில் பேரில் ஒளிவைத்திருந்த 6 ஆயிரம் கோடிகளை அப்படியே தூக்கி கொடுத்துவிட்டு, மெட்ரோ ரயிலில் 9 ஆயிரம் கோடிகளை அடித்தார் ஜெயலலிதா … அவர் இறந்ததும் அவர் இல்லம் சோதனைக்கு உட்படுத்த பட்டது …. இப்படி SPECTRUM 2G அடித்த பணத்தில் இருந்து ஒரு லட்சத்து இருபத்து இரண்டாயிரம் கோடி வரை துபாய் நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தை , மத்திய அமைச்சிடம் tanta பிறகே கனிமொழி வெளியில் வந்தார் …. எனவே … நடப்பது மோடி அரசு …

 • en thaai thamizh wrote on 19 ஏப்ரல், 2017, 19:29

  Dilip2 அவர்களே உங்களின் கூற்று பற்றி நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த செய்தி எங்கிருந்து கிடைத்தது?

 • அஸ்வினி wrote on 20 ஏப்ரல், 2017, 4:08

  இவன் சொல்கிறான்.”இஸ்லாம் நாடான இந்நாட்டில் ஏன் கிருஸ்துவ கோயில்களும் இந்து கோயில்களும் உள்ளன” என்று அப்படி என்றால் எப்போது நம் கோயில்கள் இடித்துத் தள்ளப்படும். அன்று கையாளாகாத நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம். அன்ற்று வாங்கி சாப்பிடும் மாயிகா தலைவர்கள் வாயில் எச்சி ஒழுக விரலை வாயிற்குள் வைத்து பார்ப்பார்கள்.

 • abraham terah wrote on 20 ஏப்ரல், 2017, 11:25

  இதையெல்லாம் நீங்கள் பேசக்கூடடாது அம்மணி! அப்புறம் உங்களுக்கும் உள்ளே நிரந்திர வசிப்பிடத் தகுதி கொடுத்துவிடுவார்கள்!

 • சாக்ரடீசு wrote on 20 ஏப்ரல், 2017, 11:53

  Dhilip 2 நீங்கள் சொன்னவற்றை இணையத்தில் துருவித்துருவி தேடிப்பார்தேன். பெதுவும் அகப்படவில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னவை நிச்சயம் உங்கள் சொந்த கற்பனையாகவோ பொய்யாகவோ இருக்காது என்று நம்புகிறேன். எனவே, அவ்வப்போது மோடி அல்லது மோடி அரசைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ‘உண்மைகளை’ உங்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை விக்கிலீக்ஸ்..? இப்படி இன்னும் பல ‘உண்மைகளை’ தயவு செய்து சொல்லுங்களேன். .

 • Dhilip 2 wrote on 20 ஏப்ரல், 2017, 20:54

  ஐயா சாக்ரடீசு, en thaai thamizh அவர்களே , வெறுமனே செய்திகளை பார்ப்பதற்கும், ஆழ்ந்து கவனிப்பதற்கு நிறைய வித்தாயசம் உண்டு சார் . ஒரு தேடலில் கிடைத்துவிடுமா ஞானம் ? சரி உங்கள் கேவிற்க்கே வருகிறேன். முதலில் அரியானா முன்னாள் முதல்வர் 30 கோடி உழல்வழக்கில், 1 நீதிபதி அமர்வில் உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை என்று வழக்கை முடித்ததை பாருங்கள் … ஊழல் வெறும் முப்பது கோடிமட்டும்தான். பிறகு 3 நீதிபதி அமர்வில் அவர் குற்றவாளி இல்லை என்று, மேல் முறையீடு தேவையில்லை என்று அரசு வழக்குரைஞர் வழக்கை முடித்திருப்பதை பாருங்கள் … ஏற்கனவே FORBES நிறுவனம் அரியானா முன்னாள் முதல்வரை 7 ஆண்டுகளுக்கு முன்னமே அவர் சொத்து மதிப்பை குறிப்பிடுவதை தேடுங்கள். இப்படித்தான் ஜெயலலிதாவும். அவர் ஊழல் வெறும் அறுபது கோடி. அதற்க்கு 12 கோடி அபராதமும் கட்டியிருக்கிறார். இருப்பினும் ஜெயில் தண்டனையில் இருந்து எப்படி தப்பித்தார் என்றால் , அவர் மறைத்து வைத்திருந்த கருப்பணத்தை துல்லியமாக காட்டிய மத்திய அமைச்சு, சுமுக தீர்வொன்றை வைத்தது. எனவே தான் அவர் ஜெயிலில் இருக்கும் பொழுது தீக்குளித்த 63 அதிமுகா தொண்டர்கள் மீதும் விசாரணை செய்யாமல் வழக்கை மூடியது மோடி அரசு …. சசிகலா 1000 கோடியில் வாங்கிய திரையரங்கம் மற்றும் மெட்ரோ ரயில் ஆரம்ப விலை 11000 கோடியிலிருந்து எப்படி 20 ௦௦௦ கோடியை தொட்டது என்று விளக்க முடியாமல் ….. இப்படி சல்மான் கான் வழக்கிலும் சுமுக தீர்வொன்றை வைத்தது மோடி அரசு …. அந்த கிராமத்தையே தத்தெடுத்திருக்கிறார் சல்மான் ….அதே போல்தான் சன் நிறுவனத்திற்கு தரப்படட ஒரு லட்சத்து இருபத்து இரண்டாயிரம் கோடியை மத்திய வங்கியிடம் ஒப்படைத்த பிறகுதான் கனிமொழி ஜாமீன் தரப்பட்ட்து … அதுவும் 1 வருடம் கழித்து …. வழக்கு நிலுவையில் உள்ளது … டைம்ஸ் சஞ்சிகை கலைஞரின் உதிரி பணம் மட்டும் 500 கோடி தாண்டும் என்கிறது … இப்படி பல … அதிலும் உலகத்தில் இருக்கும் 1 இருந்து 600 வது பணக்காரர்கள் அரசியல் வாதிகள் என்று தெள்ள தெளிவாக அமெரிக்க சஞ்சிகை கூறியுள்ளது … இதில் விளாமிடிர் புடின் 8000 கொடிகளை சேர்த்துள்ளார் …

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: