சித்தி காசிம்: இந்தியர்கள் இங்கு நாடற்றவர்களாக இருக்கையில், ஸக்கீருக்கு ஏன் பிஆர் தகுதி?

 

whyzakirprசமயப் போதகர் ஸக்கீருக்கு நிரந்தர தங்கும் தகுதி (பிஆர்) வழங்கியதற்காக வழக்குரைஞர் சித்தி காசிம் அரசாங்கத்தைச் சாடியுள்ளார்.

பல்லாண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் 300,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று அவர் ஃபிரி மலேசியாவிடம் கூறினார்.

அந்த 300,000 இந்தியர்களுக்கு பிஆர் தகுதி மட்டுமே இருக்கிறது. அப்படி இருக்கையில் பிஆர் தகுதி கொடுத்து ஏன் இன்னொரு இந்தியரை (ஸகீர்) அதில் சேர்க்க வேண்டும் என்று அவர் வினவினார்.

மார்ச் 1 இல், சித்தி காசிம் மற்றும் 18 தனிப்பட்டவர்கள் சமயப் போதகர் ஸகீருக்கு இடமளித்ததற்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஸக்கீர் பொதுமேடையில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுகிறார். அவர் நாட்டில் இருப்பது மலேசியாவின் பாதுகாப்புக்கு பெரும் மிரட்டலாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தேடப்பட்டு வரும் ஒரு மனிதருக்கு நிரந்தர தங்கும் தகுதி அளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று சித்தி மேலும் வினவினார்.