பாகாங் அரசுக்கு எதிராக 100 விவசாயிகள் குந்தியிருப்புப் போராட்டம்

farmerமே  23இல்,   கேமரன்  மலையில்  காய்கறி  பயிர் செய்யும்   100 பேர்,   பாகாங்   அரசு   தங்களுக்கு   நிரந்தர  நிலாப்  பட்டாக்கள்    வழங்க    வேண்டும்     என்ற   கோரிக்கையை    முன்வைத்து   குவாந்தானில்,  விஸ்மா   ஸ்ரீபாகாங்கில்   குந்தியிருப்புப்   போராட்டம்    நடத்துவர்.

“வெற்று   வாக்குறுதிகளில்    எங்களுக்கு    அக்கறை  இல்லை.   பத்தாண்டுகளாக   பேச்சுவார்த்தை   நடத்தி  வருகிறோம்,   மேலும்  பேச்சு  நடத்த  விருப்பமில்லை”, என  பி.சுரேஷ்   கூறினார்.  சுரேஷ்,   கேமரன்   மலை   பார்டி  சோசலிஸ்  மலேசியா(பிஎஸ்எம்)வின்   நில,  வீடமைப்பு,  கடை    விவகாரக்  குழு (ஜேடிஆர்ஜி)  உறுப்பினர்.

ஜேடிஆர்ஜி  கேமரன்   பாதிப்புக்கு  உள்ளானதாகக்  கருதப்படும்   500- விவசாயிகளில்  20-க்கு  மேற்பட்டவர்களைப்   பிரதிநிதிப்பதாக  அவர்   சொன்னார்.