மலையக மக்களை சந்திக்கும் இந்திய பிரதமர்!


மலையக மக்களை சந்திக்கும் இந்திய பிரதமர்!

modi-speechஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பெருந்தோட்டப் பகுதி மக்களையும், இந்தியப் பிரதமர் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் பழனி திராம்பரம் தெரிவித்துள்ளார்.

அதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் எதிர்வரும் 12ஆம் திகதி ஹட்டன் நோர்வூட் மைதானத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அந்த மக்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலதிகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மலையகத்திற்கு வருகைத்தருவது தனக்கும் மக்களும் மகிழ்ச்சியான விடயம் என கூறும் அமைச்சர் அவரை வரவேற்பதற்கு அவசியமாக அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் தன்னால் நேரடியாக ஆராய்ந்து பார்க்கப்படும் என கூறியுள்ளார்.

இந்திய பிரதமரின் மலையக விஜயம் தொடர்பில் ஆயத்தமாகுவதற்காக நேற்றைய தினம் ஹட்டன் நோர்வூட் மைதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 -tamilwin.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: