வட கொரியா லாக்- டவுன்: பெரும் பதற்றம் உருவாகியுள்ளது: காலை வாரிய சீனா மற்றும் ரஷ்யா


வட கொரியா லாக்- டவுன்: பெரும் பதற்றம் உருவாகியுள்ளது: காலை வாரிய சீனா மற்றும் ரஷ்யா

வட கொரியா மீது அமெரிகா என்நேரமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால். சீனா தனது பெருந்தொகையான ராணுவத்தை வட கொரிய எல்லைக்கு அனுப்பியுள்ளது. இது அன் நாட்டு ராணுவத்திற்கு உதவ அல்ல. அமெரிக்கா தாக்கினால் ,பல்லாயிரக்கணக்கான கொரிய மக்கள் சீனாவுக்குள் அகதிகளாக நுளைந்துவிடுவார்கள். இதனை தடுக்கவே சீனா தனது ராணுவத்தை அனுப்பியுள்ளது.

இது போதாது என்று ரஷ்யாவும் தனது ராணுவத்தை பெரும் தொகையாக எல்லையில் குவித்துள்ளது. காரணம் ரஷ்யாவுக்குள் அகதிகள் நுளைந்துவிடக் கூடாது என்பதற்காக தான். இன் நிலையில் வட கொரியாவின் எல்லா எல்லைகளிலும் அண்டை நாட்டு ராணுவம் குவிக்கப்பட்டு, அன் நாடு முற்று முழுதாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளோடு இருந்த தரை வழியும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் வட கொரியா தற்போது என்ன செய்வது என்று தெரியாத தவிப்பில் உள்ளது.

சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் கணிப்பின் படி, அமெரிக்கா வட கொரியா மீது என்னேரமானாலும் தாக்கலாம் என்ற முடிவை எட்டிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வட கொரிய அதிபர் கிம்-ஜுங் அசைந்த பாடாக இல்லை. இன்னும் இறுமாப்பு பேசி அமெரிக்காவை உசுப்பேற்றி வருகிறார். ஆனால் இதில் ஒரு விடையம் ஒன்றும் கூறப்படுகிறது. அது என்னவென்றால் அமெரிக்கா இந்த யுத்தத்தை விரும்புகிறது. வட கொரியா போன்ற ராணுவ ரீதியில் முன்னேறிய நாடு ஒன்றோடு போரிட்டால் தான், தனது ஆயுதங்களின் பலத்தையும் அமெரிக்கா பரிசோதித்து பார்க்க முடியும்.

வட கொரியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளது. ஆனால் அது அவற்றை ஏவினால், அதனை நடு வானில் சுட்டு வீழ்த்தும் திறன் அமெரிக்காவிடம் உள்ளது. இருப்பினும் அதனை ஒருபோதும் அமெரிக்கா நிஜமாக பரிசோதனை செய்தது கிடையாது. இப்படி ஒரு யுத்தம் தொடங்கினால், அது போன்ற பல ஆயுதங்களை பரீட்ச்சித்துப் பார்க்க முடியும் அல்லவா ?

-athirvu.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • அலை ஓசை wrote on 21 ஏப்ரல், 2017, 16:39

    வடகொரியாவை அமெரிக்கா தாக்கினால்
    அணு ஆயுதத்தைவீச வட கொரியா தயங்காது
    பாதி உலகம் அழியும்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: