ஒரே வீட்டில் 32 புதிய வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்? பெர்சே கேள்வி

bersihமலாக்காவில்   புக்கிட்   கட்டில்  நாடாளுமன்ற   தொகுதியில்   உள்ள   சட்டமன்ற   தொகுதியான    புக்கிட்   பாருவில்   32  “ஆவி  வாக்காளர்கள்”  ஒரே  முகவரிக்குத்   தங்கள்  இருப்பிடத்தை  மாற்றிக்கொள்ள    தேர்தல்  ஆணையம்   இடமளித்தது     எப்படி    எனத்  தேர்தல்   சீரமைப்புக்காக   போராடிவரும்   பெர்சே   கேள்வி   எழுப்பியுள்ளது.

இவ்விவரம்   கடந்த  ஆண்டு  கடைசி   காலாண்டில்    அரசிதழில்   பதிவு   செய்யப்பட்ட   வாக்காளர்   பட்டியலில்       காணப்படுவதாக   பெர்சே   அதிகாரி    சான்  ட்சு   சோங்   இன்று    செய்தியாளர்   கூட்டமொன்றில்    தெரிவித்தார்.

“ஆவி   வாக்காளர்கள்  என்றால்,   பதிவு  செய்யப்பட்ட  முகவரியில்  குடி  இராத  வாக்காளர்கள்    என்ற   பொருளும்   உண்டு”,  என்றாரவர்.

கடந்த   பொதுத்   தேர்தலில்    பாஸ்   வேட்பாளர்  முகம்மட்   காசிம்   48-வாக்குகள்   பெரும்பான்மையில்தான்   புக்கிட்   பாரு   சட்டமன்றத்   தொகுதியை     வென்றார்  என்பதையும்   சான்   சுட்டிக்காட்டினார்.