பிரதமர், அமைச்சர்கள் அலவன்சுகள் குறைக்கப்பட வேண்டும்: பாஸ் கோரிக்கை

pas wingநாட்டின்   செலவின  நிர்வாகம்     நல்ல  முறையில்   நடக்கிறது    என்பதைக்  காண்பிக்கும்   வகையில்      பிரதமரும்   அமைச்சர்களும்     அவர்களின்    அலவன்சுகளைக்   குறைத்துக்  கொள்ள    வேண்டும்     என்று    பிரிவு   கோரிக்கை   விடுக்கப்பட்டுள்ளது.

அக்கோரிக்கையை    விடுத்த    பாஸ்   மகளிர்    தலைவர்   நூரிடா   முகம்மட்  சாலே,    அந்த   விசயத்தில்   கூட்டரசு   அரசாங்கம்   பாஸின்   நிர்வாகத்தில்    உள்ள  கிளந்தான்  மாநில   அரசைப்  பின்பற்ற    வேண்டும்  என்றார்.

கடந்த   டிசம்பர்     9-இல்,  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   ரிங்கிட்டின்   மதிப்பு     உயரும்   என்று    கூறியதை   நினைவுபடுத்திய     அவர்,   அது   மக்களுக்கு    நம்பிக்கையூட்டுவதற்காக   சொல்லப்பட்ட   “பொய்யுரை”  என்றார்.

அப்போது   ரிங்கிட்டின்  மதிப்பு   ஒரு  யுஎஸ்  டாலருக்கு  ரிம4.40ஆக   இருந்தது.  இப்போதும்   அதில்   பெரிய  மாற்றமில்லை   என  நுரிடா    கூறினார்.

“எனவே,  அது   மக்களை   அமைதிப்படுத்துவதற்காக    சொல்லப்பட்டது   என்பது   தெளிவாக   தெரிகிறது”,  என்றார்.