பாஸ் எவருடனும் ஒத்துழைக்கும், அதன் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்

coopபாஸ்   யாருடனும்    ஒத்துழைக்க   முடியாது   என்று   அதன்   கதவுகளை  இழுத்து  மூடிக்கொள்ளவில்லை.  அது  ஒத்துழைக்க  தயாராகவே  உள்ளது.

“டிஏபி,  பார்டி   அமனா   நெகரா (அமனா)   அல்லது   வேறு   எந்தக்  கட்சியாக   இருந்தாலும்  எங்கள்   நிபந்தனைகளை  ஏற்றுக்கொண்டால்   ஒத்துழைக்க     நாங்கள்   தயார்”,  என  பாஸ்  ஆன்மிகத்   தலைவர்   ஹஷிம்   ஜாசின்  கூறினார்.

இன்று ,  அலோர்   ஸ்டாரில்   பாஸ்  ஆண்டுக்  கூட்டத்தில்   கலந்துகொண்ட    அவர்   செய்தியாளர்களிடம்   பேசினார்.   எந்த  அரசியல்   ஒத்துழைப்பும்   “இஸ்லாத்துக்கு  முன்னுரிமை”  கொடுப்பதாக   இருக்க   வேண்டும்  என்றாரவர்.

அதற்கு  பாஸ்   தலைவர்கள்தான்   அதிகாரத்தில்   இருக்க    வேண்டும்   என்பது  பொருளல்ல .

“இஸ்லாத்துக்கு  முன்னுரிமை  கொடுக்கும்   ஒருவர்  தலைமை   தாங்க  வேண்டும் .  அதுதான்    எங்கள்   விருப்பம்”, என்றார்.