நஜிப் அரசு ஊழியரல்ல, நீதிமன்றம் தீர்ப்பு

 

najibnotpublicofficerமுன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் மற்றும் இருவர் பிரதமர் நஜிப் அரசுப் பணியில் சட்டப்பூர்வமான செயலை தவறாக செய்ததாக அவருக்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

நஜிப் ரசாக், பிரதமர் என்ற முறையில் ஓர் அரசு ஊழியர் அல்ல, ஆகவே அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு காரணம் இல்லை என்று நீதிபதி அபு பாக்கார் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வாதிகளான மகாதிர், அபு ஹசான் மற்றும் அனினா ஷாஅடுடின் ஆகிய மூவரும் செலவுத் தொகையாக ரிம30,000 கட்டும்படி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அம்மூவரும் நஜிப்புக்கு எதிராக ரிம2.642 பில்லியன் கோரும் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

மலேசிய அரசமைப்புச் சட்டம் மற்றும் பொருள் விளக்குதல் சட்டம் 1948 மற்றும் 1967 ஆகியவற்றின் கீழ் பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் செயலாளர்கள் பொதுப்பணியாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு நிருவாகத்தின் உறுப்பினர்கள் என்று கூறுகின்றன. அவற்றின் அடிப்படையில் நீதிபதி அபு பாக்கார் அவரின் தீர்ப்பை வழங்கினார்.

இத்தீர்ப்பு பற்றி கருத்துரைத்த வாதிகளில் ஒருவரான கைருடின் மேல்முறையீடு, தேவைப்பட்டால் பெடரல் நீதிமன்றம் வரையில், செய்யப்படும் என்று கூறினார்.