சிஎம் அரசுப் பணியாளர் என்கிறபோது பிஎம் யார்? கூலியாளா?- மகாதிர்

dr mஅரசுப்  பணியில்   உள்ள   பிரதமர்(பிஎம்)   நஜிப்   அப்துல்  ரசாக்    அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்தினார்   என்று   தாம்   தொடுத்த    வழக்கில்     உயர்  நீதிமன்றம்   அளித்த    தீர்ப்பு   குழப்பம்   தருவதாக   உள்ளது   என   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   கூறினார்.

மகாதிர்  வேறு   இருவருடன்  சேர்ந்து   தொடுத்த     அவ்வழக்கை     விசாரித்த   நீதிபதி    அபு   பக்கார்  ஜயிஸ்,    பிரதமராக  உள்ள   நஜிப்   அரசமைப்பு    அளிக்கும்  விளக்கத்தின்படி    பார்த்தால்   அரசுப்   பணியாளர்    அல்ல    என்றும்   எனவே  அவர்மீது    நடவடிக்கை    எடுக்க  இயலாது    என்றும்   தீர்ப்பளித்தார்.

அப்படியானால்   பிரதமர்   யார்   என்று   வினவுகிறார்    மகாதிர்.

பினாங்கில்   முதலமைச்சர் (சிஎம்)   லிம்   குவான்  எங்மீது   ஊழல்  குற்றம்   சுமத்தப்பட்டிருப்பதை     அவர்    சுட்டிக்காட்டினார்.

“குவான்   எங்-கைப்   பொருத்தவரை   அரசுப்  பணியாளராகக்  கருதப்படுகிறார்”,  என  மகாதிர்    மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.

“ஒரு  சிஎம்  அரசுப்  பணியாளர்   என்றால்,   பிரதமர்   யார்,  கூலியாளா?”,  என்றவர்  குத்தலாகக்  குறிப்பிட்டார்.