மே தினப் பேரணியில் கூட்டமே இல்லை

dayஇவ்வாண்டு  கோலாலும்பூரில்    நடைபெற்ற   மே  தினப்   பேரணியில்    கூட்டமே   இல்லை.  கலந்துகொண்டவர்கள்   200   பேர்   சொச்சம்தான்.

கடந்த    ஆண்டில்   1,500   பேர்    வந்தனர்.  அதற்கும்    முந்திய     ஆண்டில்   20,000  பேர்   திரண்டிருந்தனர்.

மலேசிய    சோசலிசக்  கட்சி  ஏற்பாடு    செய்திருந்த   இவ்வாண்டு   பேரணி   தொழிலாளர்   வேலை இழப்பு   நிதி   என்ற  கருப்பொருளைக்   கொண்டிருந்தது.

பேரணிக்கு   வந்தவர்கள்   சிவப்புச்    சட்டை    அணிந்து   காலை  10  மணி   அளவில்   கோலாலும்பூர்   ரயில்   நிலையத்துக்கு    எதிர்ப்புறத்தில்   ஒன்று   திரண்டனர்.

பலர்  “Hilang Kerja, Pekerja Merana” (தொழிலாளர்கள்   வேலை  இழந்து   தவிக்கிறார்கள்)  என்று   எழுதப்பட்டிருந்த    அட்டைகளை   ஏந்தியிருந்தனர்.

“தொழிலாளர்கள்   வாழ்க”,  முதலாளித்துவம்   ஒழிக”,  எங்களுக்கு  உரிமை   வேண்டும்”  என்றும்   முழக்கமிட்டனர்.