ஜுகதி: 40 நாடாளுமன்ற இடங்கள், 5 மாநிலங்கள் என்பது வெறும் வாய்ச்சவுடால் அல்ல

1zuhபாஸ்  ஐந்து   மாநிலங்களையும்     40  நாடாளுமன்ற   இடங்களையும்   கைப்பற்றும்   என்பது   வெறும்    பேச்சல்ல    ஆய்வுகளின்   அடிப்படையில்தான்   அந்த   இலக்கு   நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக    பாஸ்  கட்சியின்   வியூகவாதி    முகம்மட்  ஜுகதி   மட்சூகி     கூறுகிறார்.

கிளந்தானைத்   தக்க   வைத்துக்கொள்வது,   திரெங்கானு,    கெடா,   பகாங்,  சிலாங்கூர்  ஆகியவற்றைக்  கைப்பற்றுவது   பாஸின்   குறிக்கோள்.

பாஸ்   ஆய்வுக் கழகம்      பல    ஆய்வுகளைச்   செய்துள்ளது,   இன்வோக்,   டாருல்   எஷான்  கழகம்   போன்ற     மற்ற    ஆய்வுக்கழகங்கள்  கண்டறிந்துள்ளதையும்    கருத்தில்    கொண்டிருக்கிறது   என்றாரவர்.

ஆனால்,  ஆய்வு  முடிவுகளின்   விவரங்களை    அவர்   வெளியிடவில்லை.