சிவநேசன் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை, ஜெயகுமார் கூறுகிறார்

 

psmthreatensdapmanமலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமாரின் சொத்துப் பிரகடனம் குறித்து டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் எழுப்பியுள்ள சந்தேகம் குறித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயெகுமார் கூறுகிறார்.

சிவநேசனின் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட நாளிதழ் தமிழ் மலரில் அவரின் மன்னிப்பு கோரல் இடம்பெற வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.

சிவநேசன் சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி சுங்கை சட்டமன்ற தொகுதியை வென்று சாதனை படைத்தார். ஆனால், நான் நடுத்தர கும்பத்தில் பிறந்தவன். அவர் படைத்த சாதனை தம்மீது அவதூறு கூறுவதற்கான உரிமையை சிவநேசனுக்கு அளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ் மலர் மே 21 இல் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்ட சிவநேசனின் அறிக்கையில் நான் எனது சொத்துகளில் சிலவற்றை மறைத்து விட்டேன், என் தகப்பனாரிடமிருந்து பெற்ற சொத்துகள் உட்பட, என்று கூறியிருப்பது நான் ஒரு போலியான சொத்துப் பிரகடனம் செய்ததின் மூலம் மலேசியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட ஒரு பொய்யர் என்று பொருள்படும்.

“நான் நம்பிக்கைக்குரியவன் அல்ல என்பதோடு நான் சத்தியப்பிரமான பிரகடனம் சட்டம் 1960 இன் கீழ் குற்றம் புரிந்துள்ளேன் என்பது சிவநேசனின் கூற்றாகும்”, என்று ஜெயக்குமார் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிவநேசனின் உணர்ச்சிவசப்பட்ட அறிக்கை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் சொத்துடமையை அறிவிக்க வேண்டும் என்ற மலேசிய சோசியலிசக் கட்சியின் கொள்கையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.

பதவியை வைத்து பணம் சம்பாதிக்கக்கூடாது என்பது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று அவர் விளக்கம் அளித்தார்.

சிவநேசன் அவரது கவனத்தைச் சரியான இலக்கின் மீது செலுத்த வேண்டும் என்றார் ஜெயக்குமார்.

கடந்த புதன்கிழை, ஜெயக்குமார் ஆண்டுதோறும் அறிவிக்கிற அவரது சொத்துடமை பிரகடனத்தை வெளியிட்டார். அதில் அவர் சம்பளம் மற்றும் அலவன்ஸாக பெற்ற ரிம216,000 இல் மூன்றில்-இரண்டு பங்கை அவரது தொகுதிக்காக செலவிட்டுள்ளார்.