கேஎல் மாநகராட்சிமீது குடியிருப்பாளர்கள் எம்ஏசிசியில் புகார்

dbklபண்டார்   துன்   ரசாக்     குடியிருப்பாளர்கள்   அங்குள்ள    கால்பந்து   திடல்   விற்கப்பட்ட    விவகாரத்தை      மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையத்திடம்   புகார்    செய்துள்ளனர்.

குடியிப்பாளர்களுக்காக   வழக்குரைஞர்    சுல்ஹஸ்மி   ஷரிப்   அப்புகாரைச்   செய்தார்.

“ஒதுக்கப்பட்ட  பகுதி   என   அரசிதழில்  பதிவு  செய்யப்பட்ட   நிலத்தை   டிபிகேஎல்  (கோலாலும்பூர்   மாநாகராட்சி    மன்றம்)  மேம்பாட்டாளர்களிடம்   ஒப்படைத்தது   எப்படி   என்பதை    எம்ஏசிசி  துல்லியமாக   விசாரிக்க   வேண்டும்”,  என்று   சுல்ஹாஸ்மி   கூறினார்.

சர்ச்சைக்குரிய  அந்த   2.1 ஹெக்டார்   பரப்புள்ள    கால்பந்து   திடல்   பண்டார்  துன்  அப்துல்  ரசாக்கில்  உள்ளது.  அதை     நான்கு    40-மாடி   அடுக்ககம்   கட்டுவதற்காக   டிபிகேஎல்   Siner Juta Sdn Bhd-டிடம்   விற்பனை   செய்துள்ளது.