குறைகூறுவதாக இருந்தால் அதையும் நியாயமான முறையில் செய்வீர்: பாஸுக்கு பினாங்கு சிஎம் அறிவுறுத்து

dapபினாங்கில்,    சூதாட்ட     நடவடிக்கைகள்   உள்பட,   எது  குறித்து   குறை   சொல்வதாக   இருந்தாலும்   அதையும்      “அறிவார்ந்த    முறையில்”     செய்ய   வேண்டும்  என  பாஸுக்கு    அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆளும்  கட்சியாக    மாற   ஆசைப்படும்    பாஸ்,   மாநில     நிர்வாக,   நீதிமுறை   குறித்து   கற்றுக்கொள்வது    நல்லது     என   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்     கூறினார்.

“இதையெல்லாம்     தெரிந்து  கொள்ளாமல்    அது      ஆளும்   கட்சியாவது     எப்படி?”,   என்றவர்   இன்று   பினாங்கில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   வினவினார்.

சூதாட்டத்தைப்  பொருத்தவரை      அதை     நடத்துவதற்கு    உரிமம்   வழங்குவது      புத்ரா   ஜெயா.

“சட்ட விரோத      சூதாட்ட    நடவடிக்கைகளுக்கு   எதிராக   செயல்படுவது  போலீசின்  வேலை”,  என்றாரவர்.

ஒரு  காலத்தில்    பினாங்கில்    சூதாட்ட   விடுதி   கட்ட    விரும்பிய    ஒரு   கட்சியை    ஆதரித்த    அம்னோ    தலைவரை-  பாடாங்   புசார்    எம்பி   ஜஹிடி    சைனுல்   அபிடினை-   பாஸ்    குறைகூறவில்லையே      அது    ஏன்   என்றும்   லிம்   வினவினார்.

“நாங்கள்   அதைக்   கடுமையாக    எதிர்த்தோம்,  ஆனால்   பாஸ்   அம்னோ    தலைவரை     எதிர்க்கவில்லை”,  என   டிஏபி   தலைமைச்    செயலாளர்    கூறினார்.

“பாஸ்    பக்கத்தான்  ஹராபானைக்  குறைகூறுவதன்வழி      அம்னோ   அல்லது   பிஎன்னுக்கு    உதவ  விரும்பினால்      அதையும்  நியாயமான   முறையில்    செய்ய    வேண்டும்”.  என்றார்.

பினாங்கில்   சூதாட்டம்    பெருகி   இருப்பதற்கு     டிஏபியின்  “முதலாளித்துவ”   அரசியல்தான்   காரணம்    என   பினாங்கு   பாஸ்     அறிக்கை     வெளியிட்டது     குறித்துக்   கருத்துரைத்தபோது   லிம்    இவ்வாறு  கூறினார்.