லியு: குளுவாங் பஜாரை இடமாற்றம் செய்ய விரும்பியது மசீச, டிஏபி அல்ல

bazaarடிஏபி    அல்ல     மசீசதான்   பத்தாண்டுகளுக்கு   முன்பு    ஜோகூர்,  குளுவாங்கில்   உள்ள   ரமலான்   சந்தையை     வேறோர்  இடத்துக்கு    மாற்ற   விரும்பியது   என    குளுவாங்    எம்பி    லியு     சின்   தொங்   கூறினார்.

குளுவாங்   நகரில்   அச்  சந்தை     செயல்படுவதை    மசீச    அரசியல்வாதி    ஒருவர்    எதிர்த்தார்    என்பதை    உள்ளூர்   மக்களிடமிருந்து    தெரிந்து   கொண்டதாக   லியு    கூறினார்.

எனவே,  குளுவாங்   அம்னோ    தலைவர்     முகம்மட்   ஜயிஸ்    சர்தாயும்    குளுவாங்   எம்பி     ரசாலி    இப்ராகிமும்    2007-இல்,    டிஏபி    ரமலான்    சந்தையை   மூடுவதற்கு   விரும்பியதாக      குற்றஞ்சாட்டியிருப்பது  “ஒரு  அப்பட்டமான  பொய்” என்றாரவர்.

“உண்மையில்    நடந்தது    என்னவென்றால்,  மசீச  (ஜோகூர்)   சட்டமன்ற    உறுப்பினர்   ஒருவருக்கு   நகருக்குள்   சந்தை   இருப்பது   பிடிக்கவில்லை.    அப்போதைய    மாவட்ட     அதிகாரியிடம்    அவர்   அதற்கு    எதிர்ப்புத்  தெரிவித்தார்.

“ஜயிசும் ரசாலியும்   மசீசவையும்   டிஏபியையும்    போட்டுக்  குழப்புவதுதான்   என்னைத்   திகைப்படைய    வைக்கிறது .  அவர்கள்  மறந்திருக்கலாம்   என்பதால்   நினைவுபடுத்த   விரும்புகிறேன்,  மசீச   பிஎன்    கட்சிகளில்   ஒன்று,   அம்னோவின்     நெருக்கமான   பங்காளிக்  கட்சி”,  என  லியு   ஓர்   அறிக்கையில்   கூறினார்.