அமனா: விசுவாசம் அல்லாவுக்கும் இறைத்தூதருக்கும் மட்டுமே, கிட் சியாங் மற்றும் மகனுக்கு அல்ல

 

LoyaltytoAllahnotKitபாஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அமைத்த கட்சி அமனா. அது டிஎபியின் எடுபிடிக் கட்சி என்று சிலரால் கிண்டல் செய்யப்படுவதுண்டு.

மெகாட் இப்ராகிம் என்ற ஒரு டிவிட்டர் பதிவாளர், அமனாவில் சேர்ந்தால் அது லிம் குவான் எங் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோருக்கு விசுவாசமாக இருப்பதாகப் பொருட்படும் என்று டிவிட் செய்திருந்தார்.

குவான் எங் டிஎபியின் தலைமைச் செயலாளர்; அவரது தந்தை கிட் சியாங் கட்சியின் ஆலோசராக கருதப்படுகிறார்.

மெகாட்டிற்கு பதில் அளித்த அமனாவின் தொடர்புத்துறை இயக்குனர் காலிட் சாமாட், விசுவாசம் அல்லாவுக்கும் இறைத்தூதர் முகமட் ஆகியோருக்கு மட்டுதான், தனிப்பட்ட எவருக்கும் இல்லை என்று கூறினார்.

அது இஸ்லாத்தைப் பாதிக்கக்கூடிய ஒன்று என்று அறியப்பட்டால், அது ஓர் உலாமாக இருந்தாலும்கூட அது எதிர்க்கப்பட வேண்டும் என்று சாமாட் மேலும் கூறினார்.

மேற்கூறப்பட்ட டிவிட்டர் செய்தி ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினரான சாமாட், அமனாவின் பங்களிப்பு பற்றியும், அக்கட்சி பாஸுக்கு மாற்றுக் கட்சியாகியுள்ளதா என்பது பற்றியும் பெறும் பல டிவிட்டர் செய்திகளில் ஒன்றாகும்.

இதற்கு முன்னதாக, இன்னொரு டிவிட்டர் செய்தியில் அமனா, பாஸ் கட்சியின் இடத்தைப் பிடித்து விட்டது என்று சாமாட் கூறியிருக்கிறார்.

பாஸ் கட்சியின் தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் பாஸ்சில் இருக்கிறார்கள். ஆனால், சிந்திக்கும் ஆற்றலுடையவர்கள் அமனாவுடன் இருக்கிறார்கள் என்று சாமாட் மேலும் கூறினார்.