14வது பொதுத் தேர்தலில் வாழ்வாதார விவகாரங்களுக்கே வாக்காளர்கள் முக்கியத்துவம் அளிப்பர்

14 geஅடுத்த    பொதுத்   தேர்தலின்    முடிவைத்   தீர்மானிக்கப்   போவது   வாழ்வாதார  பிரச்னைதானே    தவிர     1எம்டிபி    ஊழல்களோ    சீன    முதலீட்டாளர்களுடன்    செய்து  கொள்ளப்பட்ட    வர்த்தக   உடன்பாடுகளோ   அல்ல  என்று    ஸ்ரேய்ட்ஸ்    டைம்ஸ்    இன்று   கூறியது.

நேற்று   சிங்கப்பூரில்    நடந்த   “மலேசியாவின்   அடுத்த   பொதுத்   தேர்தல்:  ஆபத்துகளும்    எதிர்பார்ப்புகளும்”    என்ற   கருத்தரங்கில்   கலந்துகொண்ட   பேச்சாளர்கள்   ஊழல்  விவகாரங்களை   வைத்து    பிஎன்   அரசாங்கத்தை     தேர்தலில்    தோற்கடிக்க    முடியாது    என்றனர்.

கருத்துக்  கணிப்பு   மையத்தின்   இயக்குனர்      இப்ராகிம்   சுபியான்,    1எம்டிபி    விவகாரங்கள்   இப்போது  “வரலாறு   ஆகி  வருவதாக”க்  கூறினார்.

மலேசியாவுக்கான     சிங்கப்பூரின்   முன்னாள்   தூதரும்    இப்போது  சிறப்புப்   பணிகளுக்கான    தூதராகவும்   உள்ள    ஒங்   கெங்    யோங்,    1எம்டிபி     ஊழல்  விவகாரத்தால்   கோலாலும்பூரின்  பெயர்   ஓரளவு   கெட்டுப்போனது   உண்மைதான்    ஆனால்   அது    பிரதமர்    நஜிப்     அப்துல்    ரசாக்கையோ     அவரது     ஆளும்   கட்சியையோ    பெரிய     அளவில்   பாதிக்கவில்லை  என்றார்.

மலேசியர்கள்    ஆறு   விழுக்காடு    பொருள்,  சேவை   வரி,   பலவீனமான   ரிங்கிட்,     பணவீக்கம்     ஆகியவற்றால்    பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

1எம்டிபி    மின்  தயாரிப்பு   ஆலைகள்,   புரோட்டோன்   கார்   தயாரிப்பு    நிறுவனம்    ஆகியவை    சீனாவிடம்  விற்கப்பட்டது,    ரிம55  பில்லியன்    செலவில்     அது    ரயில்வே    திட்டங்கள்,   துறைமுகத்    திட்டங்களை   மேற்கொள்வது     போன்றவை   உள்பட   மலேசியா    சீனாவுடன்    செய்து  கொண்டுள்ள     ஒப்பந்தங்களும்   எளிய   நிபந்தனைகளில்     அது   அளிக்கும்   கடன்களும்-       சர்ச்சையைக்  கிளப்பி   விட்டிருப்பதாக    த   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்    கூறியது.

ஆனால்,  நஜிப்   தாம்     நாட்டை   “விற்றுவிட்டதாக”க்   குற்றஞ்சாட்டப்படுவதை     மறுக்கிறார்.     இப்பெருந்   திட்டங்கள்      நிறைய  வேலை   வாய்ப்புகளை    உருவாக்கி     தென்கிழக்காசியாவின்    மூன்றாவது    பெரிய   பொருளாதாரத்தை   மேலும்    விரிவுபடுத்தும்    என்றார்.

மக்களில்    பெரும்பாலோரின்  கருத்து      இன்னும்   அவருக்கு (நஜிப்)    எதிராக   இருந்தாலும்    அது   அவருக்கு     எதிராக   ஒன்றுபட்ட      கூட்டணியாக    மாறுவது    சந்தேகமே.

இளைஞர்களுக்கு   நல்ல    வேலை   கிடைக்குமா    என்ற  கவலை,   புதுமணத்   தம்பதிகளுக்கு    ஒரு  வீடு   வாங்க   முடியுமா,   சம்பளம்   உயருமா     என்ற    கவலை,    பணி  ஓய்வு   பெற்றோருக்கு   போதுமான   சேமிப்பு   இல்லையே     என்ற  கவலை   என  இப்ராகிம்    கூறினார்.

ஓசிபிசி    வங்கி   அதிகாரி   செலினா    லிங்,   மலேசியாவின்   பொருளாதாரம்   ஆரோக்கியமாக   இருப்பதாகவே    செய்திகள்   கூறினாலும்   அது   வாக்காளர்களைப்  பாதிக்காது    என்றார்.

“தேர்தல்    என்கிறபோது    வாழ்வாதார  பிரச்னைகளை   வைத்துத்தான்   மக்கள்    வாக்களிப்பர்.  பொருளாதார   வளர்ச்சி   விகிதம்   ஐந்து   விழுக்காடு   அல்லது   அதற்கும்   குறைவு    என்பதெல்லாம்    அங்கு    எடுபடாது”,  என்றார்.

“முடிவு  2013-இல்   நஜிப்   அல்லது   பிஎன்   பெற்றதைவிட    மோசமானதாக   இருக்காது    என்றுதான்   நினைக்கிறேன்.  மலாய்   வாக்காளர்களைப்   பொருத்தவரை,    அவர்களின்   நிலையில்    மாற்றமிராது   என்பதே   என்   கருத்து”,  என   ஒங்   குறிப்பிட்டார்.

நஜிப்பின்   செல்வாக்குக்  குறைந்திருந்தாலும்   மலாய்  வாக்காளர்களுக்கு    பிஎன்தான்   நம்பத்தக்கக்   கட்சியாக   உள்ளது    என்று   இப்ராகிம்      கூறினார்.