ஹராபான் ராயாவுக்குமுன் பதிவு செய்யப்படும்

amanahபக்கத்தான்   ஹராபான்   நோன்புப்   பெருநாளுக்கு   முன்னதாக   சங்கப்   பதிவகத்தில்  பதிவு   செய்யப்படும்    என   எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி    தொடர்பான   விதிமுறைகள்    இறுதி   செய்யப்பட்டு   வருவதாகவும்   அதன்  அடையாளச்   சின்னத்துக்கும்   இறுதி   வடிவம்    கொடுக்கப்பட்டு    வருவதாகவும்    பார்டி   அமனா   நெகரா  (அமனா)  துணைத்    தலைவர்   சலாஹுடின்   ஆயுப்    கூறினார்.

இறுதிக்கட்ட    ஏற்பாடுகளைச்  செய்ய    அடுத்த   வாரம்   கூட்டம்  நடத்தப்படும்    என்றாரவர்.