டிஓஜேக்குத் துணிச்சல் இருந்தால் வழக்கு தொடுக்கட்டும்: சவால் விடுகிறார் ஹிஷாம்

hisham1எம்டிபி   விவகாரத்தில்     தவறு    நடந்ததற்கான     ஆதாரங்கள்    உண்டா?   இருந்தால்         அமெரிக்க   நீதித்துறை  (டிஓஜே)யிடம்     தாராளமாக    வழக்கு    தொடுக்கட்டும்    என   அம்னோ   உதவித்   தலைவர்    ஹிஷாமுடின்    கூறினார்.

மலேசிய   முதன்மை    அதிகாரி  (எம்ஓ1)யின்   பெயர்   குறிப்பிடப்படாதது   அவர்   யார்   என்ற    சந்தேகத்தை    எழுப்புகிறது    என்று   கூறிய   அவர்,    இப்போது   எம்ஓ1-இன்  மனைவியும்   சேர்த்துப்   பேசப்படுகிறார்   என்றாரவர்.

இன்று   கோலாலும்பூரில்     செய்தியாளர்     கூட்டமொன்றில்      பேசிய     ஹிஷாமுடின்,     டிஓஜே   வழக்கு   தொடுக்கவில்லை    என்றால்       அதன்   பெயர்தான்   கெடும்    என்றார்.

“நடவடிக்கை    எடுக்காமல்    அறிக்கைமேல்     அறிக்கை   விட்டுக்   கொண்டிருக்கக்   கூடாது.   வழக்குத்   தொடுத்தால்     குற்றம்   சாட்டப்பட்டவர்கள்   தங்களை  நிரூபிக்க    அது   ஒரு    வாய்ப்பாக   அமையும்”,  என்றாரவர்.

கடந்த   ஆண்டு   பிரதமர்துறை   அமைச்சர்    அப்துல்   ரஹ்மான்    டஹ்லான்,  எம்ஓ1   என்பது   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைக்   குறிக்கும்   என்றார்.   ஆனால்,  அவர்மீது   விசாரணை  இல்லை    என்பதால்   பிரதமரின்   பெயர்   குறிப்பிடப்படவில்லை    என்றும்  கூறினார்.

ஹிஷாம்,   எம்ஓ1  நஜிப்தானா    என்ற   சந்தேகம்   எழுவதாக  குறிப்பிட்டார்.

“அவர்  யாராக   வேண்டுமானாலும்    இருக்கலாம்.

“அதிகாரப்பூர்வமாக   வழக்கு   தொடுக்க்கப்பட்டால்   மட்டுமே    நமக்குத்     தெரிய   வரும்”,  என்றாரவர்.