உளவுத்துறை-தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் கேரளாவின் காசா தெரு

உளவுத்துறை-தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் கேரளாவின் காசா தெரு

கேரளா, காசர்கோடு நகராட்சியின் துருதி வார்டில் உள்ள காசா தெரு உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் உள்ளது.

திருவனந்தபுரம்,

2016ஆம் ஆண்டு காசர்கோடு நகராட்சியை சுற்றியுள்ள பகுதியில்  21 இளைஞர்கள்  காணாமல் போனார்கள். காணாமல் போன இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்திருப்பதாக போலீசாரால் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் ‘காசா’ என்னும் பெயர் மாற்றம் மேலும் சந்தேகத்திற்கு வலுசேர்க்கிறது.

காசா என்பது பாலஸ்தீனிய சுய ஆட்சியின் கீழ் இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள ஒரு  நிலப்பகுதி ஆகும்.

துருதி ஜும்மா மஸ்ஜித் அருகில் உள்ள சாலை கடந்த மாதம் காசா என்று பெயரிடப்பட்டது. இதனை காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் திறந்துவைத்தார்.

தெருவின் வள்ர்ச்சிக்காக நகராட்சியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.  நகராட்சித் தலைவர் பீப்பாத்திமா இப்ராஹிம் தன் அதிகார வரம்பிற்குள் அத்தகைய தெருவைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று கூறி உள்ளார்.

உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள், “காசர்கோடில் உள்ள பல்வேறு பகுதிகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்த விவாதம்  நகராட்சி கவுன்சிலுக்கு வரும்போது விவாதம் நடைபெறும் பொது பெயர் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அது நிராகரிக்கப்படும். அதே காரணத்திற்காக, இத்தகைய பல பெயர்கள் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவது இல்லை என காசர்கோடு நகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பி.ரமேஷ் தெரிவித்தார்.

காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஊடுருவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த பகுதியில் சிறிய மாறூதல் ஏற்பட்டாலும் அதை உன்னிப்பாக கவனித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-dailythanthi.com

TAGS: