டிஒஜேயின் பயமுறுத்துகிற கோரிக்கைகள் விவகாரத்தில் ஏஜியின் அலட்சியம், மகாதிர் சாடினார்


டிஒஜேயின் பயமுறுத்துகிற கோரிக்கைகள் விவகாரத்தில் ஏஜியின் அலட்சியம், மகாதிர் சாடினார்

 

MripsApandi1எம்டிபி பண மோசடி விவகாரம் குறித்து டிஒஜே சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மலேசிய சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி தெரிவித்திருக்கும் கருத்து நகைப்புக்குரியது என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை, டிஒஜே தாக்கல் செய்த மிக அண்மைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சிவில் வழக்கு தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று அபாண்டி கூறியிருப்பது ஒரு விளாங்காச் செய்தி, ஏனென்றால் மலேசிய சட்டத்துறையினர் சுவிஸ் நாட்டின் விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவே இல்லை என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

1எம்டிபி விவகாரத்தில் மலேசிய ஏஜி மற்ற நாடுகளின் ஏஜிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதில்லை. சுவிஸ் ஏஜி இதைத் தெளிவாகக் கூறியுள்ளார் என்றார் மகாதிர்.

டிஒஜே வழக்கு தாக்கல் செய்வது பற்றி மலேயாவிடம் தெரிவிக்காதது குறித்து அபாண்டி தெரிவித்த ஏமாற்றம் அடிப்படையற்றது, ஏனென்றால் கூறப்படும் பணச் சலவை அமெரிக்காவில் நடந்தது.

“குற்றவாளிகள் மலேசியர்களா அல்லது இல்லையா என்பது சம்பந்தமில்லாதது. மலேசிய ஏஜி இந்த 250 பக்க அறிக்கை வெளியிடப்பட்ட விவகாரத்தில் தலையிடும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறாரா?

“இந்த அறிக்கைகள் எல்லாம் பொதுமக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ இரகசியங்கள் என்று டிஒஜெயை அறிவிக்கச் செய்ய முடியும் என்று அவர் (ஏஜி) எதிர்பார்க்கிறாரா?

“‘மலேசியன் அதிகாரி 1’ எந்தத் தவறான செயல்களிலும் சம்பந்தப்பட்டவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு அவரை டிஒஜே கேட்க வேண்டும் என்று அவர் (ஏஜி) எதிர்பார்க்கிறாரா?

“தாம் தவறான செயல்களில் சபந்தப்பட்டதாக கூறப்படுவதை குற்றவாளி எனக் கூறப்படுபவர் மறுத்த பின்னர் டிஒஜே வழக்கை மூடிவிடும் என்று அவர் (ஏஜி) எதிர்பார்க்கிறாரா?”, என்று மகாதிர் கேட்கிறார்.

“மலேசியாவில், ஏஜியும் போலீஸும் விசாரணை நடத்துவதற்கும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்துவதற்குமான குற்றச்செயல்கள் ஏதும் நடக்கவில்லை என்று முழங்கியுள்ளனர்”, என்பதை மகாதிர் சுட்டிகாட்டினார்.

“ஏஜியின் இறுமாப்புணர்ச்சி நகைப்புக்குரியது”, என்று எழுதுகிறார் மகாதிர்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: