பிஎன் தோற்றால் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படும் சாத்தியத்தை மகாதிர் மறுக்கவில்லை

emergencyஎதிர்வரும்   பொதுத்   தேர்தலில்   பிஎன்   குறுகிய   தோல்வி  காணும்   பட்சத்தில்     தேர்தல்   முடிவு  செல்லாது   என்று      அறிவிக்கப்படலாம்   என்று   நினைக்கிறார்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   தலைவர் (பெர்சத்து)   டாக்டர்  மகாதிர்    முகம்மட்.

“அப்படிச்  செய்ய  அரசாங்கத்துக்கு      ஆதாரம்   எதுவும்   தேவையில்லை.  பிஎன்னில்   உள்ள    முரடர்கள்  நிலைத்தன்மையைக்  குலைக்க   தயாராக   இருப்பார்கள்.

“அந்த   அடிப்படையில்   அவசரகாலம்    பிரகடனப்படுத்தப்பட்டு   நாடாளுமன்றம்    இடைநீக்கம்     செய்யப்படும்”,  என்று   மகாதிர்   தம்  வலைப்பதிவில்   கூறினார்.

“நாடாளுமன்றம்    நீக்கப்பட்டால்,    1969-இல்   இனக்  கலவரங்களுக்குப்  பின்னர்   அமைக்கப்பட்ட   தேசிய    நடவடிக்கை    மன்றம் (மகேரான்)   போன்ற  ஒன்று  அமைக்கப்பட்டு    இராணுவ  ஆட்சிமுறை  நடக்கும்”.

நாட்டில்     நிச்சமற்ற   நிலை    நிலவும்     அந்நேரத்தில்,     பிஎன்  மற்ற  கட்சிகளின்    எம்பிகளைத்    தன்  பக்கமாக  இழுக்கப்   பார்க்கும்    என   மகாதிர்   கூறினார்.

“போதுமான   பெரும்பான்மை   வந்ததும்   அவசரகாலம்   அகற்றப்பட்டு    பிஎன்  பெரும்பான்மை   அரசாங்கத்தை  அமைக்கும்.  நாடாளுமன்றம்  மீண்டும்   செயல்படத்   தொடங்கும்”,  என்றார்.