வடகொரியா மீது போர் தொடுப்போம்! மிரட்டும் அமெரிக்கா

north_south_001வடகொரியா மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளை மீறி, வடகொரியாவின் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்தது. இது பிராந்தியம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவசியம் இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு இராணுவ படைகள் வட கொரியா மீது பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்று அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனையை அந்நாட்டின் கூடுதல் இராணுவ பலத்தை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா மீது வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை வெளியான சிலமணி நேரங்களில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஜப்பானிய கடலில் பல ஏவுகணைகளை வீசி பயிற்சிகளை மேற்கொண்டனர். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், வட கொரியாவுக்கு எதிரான விரோத கொள்கை போக்கை அமெரிக்கா கைவிடும்வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என வட கொரியா தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை, தொடர் சோதனைகளில் சமீபத்தியதாகும். ஐ.நா பாதுகாப்பு சபையின் தடை உத்தரவை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com