அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட வியட்நாம் மாலுமிகள் தலையில்லாத சடலமாக கிடந்த கொடூரம்

abu saiyabஅபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட இரு வியட்நாம் மாலுமிகளின் தலையில்லாத சடலம் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அபு சய்யாப் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்ட வியட்நாம் மாலுமிகள் தலையில்லாத சடலமாக மணிலா: பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத இயக்கமான அபு சய்யாப் குழுவினர், அங்கு வரும் வணிக சரக்குக் கப்பலை கொள்ளையடிப்பது மற்றும் மாலுமிகளை பிணயக்கைதிகளாக கடத்துவது போன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு ஜூன் மாதம் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த வியட்நாம் சரக்குக்கப்பலை மடக்கிய அபு சய்யாப் குழுவினர், கப்பலில் இருந்த 6 மாலுமிகளை கடத்திச் சென்றனர். இதில், ஒரே ஒரு மாலுமி மட்டும் கடந்த மாதம் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். இந்நிலையில், பிலிப்பைன்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள பாசிலன் தீவு கடற்பகுதியில் இரு தலையில்லாத உடல்கள் நேற்று கரை ஒதுங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் இது குறித்து கடற்படையினரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த இரு உடல்களையும் மீட்ட கடற்படையினர்,

கடத்தப்பட்ட மாலுமிகளின் உடல்கள்தான் இவை என உறுதிப்படுத்தினர். இது தொடர்பான தகவல் தூதரக முறைப்படி வியட்நாம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு கூறியுள்ளது. மூன்று வியட்நாம் மாலுமிகள், 14 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இன்னும் அபு சய்யாப் குழுவினரிடம் பிணையக் கைதியாக இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

-athirvu.com