கட்டார் பிடிவாதம்! எச்சரிக்கும் சவுதி கூட்டணி

qatarகட்டாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கட்டார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன.

அறிக்கை ஒன்றில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள், கத்தாருக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. ஆனால் என்ன நடவடிக்கை என்பதைக் குறிப்பிடவில்லை.

கடந்த மாதம், கட்டாருடனான அனைத்து ராஜிய தொடர்புகளை நான்கு நாடுகளும் துண்டித்தன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மிகவும் சிறிய நாடான கட்டாருடன் தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்தன.

கட்டார் அரசிடம், அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடும்படியும், ஈரானுடனான உறவுகளை குறைத்துக் கொள்ளவும் மற்றும் ஜிஹாதிகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் நான்கு நாடுகள் கோரிக்கை விடுத்தன.

சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள் விதித்திருந்த நிபந்தனைகளை கட்டார் இந்த வார தொடக்கத்தில் நிராகரித்திருந்தது..

வளைகுடா நெருக்கடிக்கு மத்தியஸ்தம் செய்துவரும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் வரும் திங்களன்று குவைத்திற்கு வருகை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், தங்களுடைய 13 கோரிக்கைகளை கட்டார்நிராகரித்துள்ளது.

அந்நாடு இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் தனது கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான எண்ணத்தில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளன.

மேலும், கத்தாருக்கு எதிராக ஒரு புதிய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை குறித்த மேற்படி தகவல்கள் எதுவும் கூறப்படவில்லை.

கட்டார் உடனான தொடர்புகளை துண்டித்தது குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி, ஒரு தெளிவான ஆக்கிரமிப்பு மற்றும் அவமானம் என்று தெரிவித்துள்ளார்.

எங்களது மறுப்புக்கு கூடுதல் தடைகள் மற்றும் எச்சரிக்கை பதிலாக இருக்க முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் காரணம்தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

– BBC – Tamil