பதற்றத்தை உருவாக்கி வரும் வடகொரியா மீது புதிய திட்டம் தீட்டும் டிரம்ப்

donald-trump_orderedதொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது ஏதாவது செய்ய வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இன்றைய தினம் சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போதே மேற்கண்டவாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை அழிக்கும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகின்றது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கி வரும் வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைகளுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக அமெரிக்க அரசு, வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வடகொரியா ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

வடகொரியாவின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு கட்டும் முயற்சியில், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வெற்றிகரமான தீர்வை எட்ட முடியும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடகொரியா விஷயத்தில் ஜி ஜின்பிங் நடவடிக்கையையும் டிரம்ப் பாராட்டினார்.

-tamilwin.com