தொடரும் பதற்றம்! விஷேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் யாழ். துன்னாலை

யாழ். துன்னாலை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நீடித்துள்ளமையை அடுத்து அங்கு விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட யாரும் பிரவேசிக்க முடியாதுள்ளதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விஷேட அதிரடிப்படையினரின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை சாலையில் டயர்களைக் எரித்து பொது மக்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியிருந்தனர்.

அத்துடன், குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததுடன், தற்போது வரையிலும் அந்த பகுதியில் அசாதாரண நிலை தொடர்ந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலை வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நாளை துன்னாலையில் இடம்பெறவுள்ளது.

இதனால் அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணத்தினால் குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த விடயம் குறித்து பொலிஸார் தகவல் எதனையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

-tamilwin.com

 

விஸ்பரூபமாக மாறும் யாழ். படுகொலை! அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியமை உறுதி

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் சுட்டுக்கொலை

யாழில் பதற்றம்!! வீதியில் எரியும் ரயர்கள்

யாழ் இளைஞன் சுட்டுக்கொலை – பொலிஸார் இருவர் கைது

பருத்தித்துறையில் பதற்றம்! கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட பொலிஸ் குழு

யாழ். இளைஞன் சுட்டுக் கொலை! கைது செய்யப்பட்ட இருவருக்கும் பணி இடைநீக்கம்

TAGS: