நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்


நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்

Slide1மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார்.

வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும்.

“இத்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’ , மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல் திட்டம் இதுவாகும். சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமூகத்தை உருவாக்க எம்.ஐ.பி. ஒரு சிறந்த தளமாகும்,” என நஜிப் கூறினார்.

நேற்று மாலை, தாமான் பெர்மாத்தா தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியில், ‘மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க்கல்வி’ சிறப்பு மலர் வெளியீடு மற்றும் நினைவு தகடு திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமரோடு, கல்வி அமைச்சர் மாஹ்ட்சீர் காலிட், ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், நகர்ப்புற நல்வாழ்வு, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் நோ ஓமார் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“2013 இல், 6 புதியத் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டி, நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை 530ஆக உயர்த்தப்போவதாக வாக்களித்திருந்தோம். அதன் அடிப்படையில், தற்போது 4 தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிப்பில் உள்ளன, ஒரு பள்ளி அடுத்த மாதமும், இன்னொன்று இவ்வாண்டு இறுதியிலும் திறப்பு விழாக் காணவுள்ளன. ஆக, நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்”, என அவர் சொன்னார்.

அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க விரும்புவதாக Slide2பிரதமர் கூறினார். இவ்வாண்டு, கூடுதலாக 50 பாலர் பள்ளிகள் நிர்மாணிப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நஜிப் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 23 இல், இந்திய சமூக வளர்ச்சி திட்டமாக எம்.ஐ.பி.-யை நஜிப் அறிமுகப்படுத்தினார். அரசின் அதிகாரப் பூர்வ ஆவணமான இத்திட்டவரைவு, அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றம் காணும் எனவும் நஜிப் உறுதியளித்தார்.

“நீங்கள் ஒன்றுபட்டுவிட்டால், உங்களை ஒன்றுபடுத்தும் தலைவர் உங்களுக்கு வாய்த்துவிட்டால், எதிர்காலத்தில் நீங்கள் பலமான சமூகமாக உருவாவீர்கள் என நான் நம்புகிறேன். ஆக, உங்களை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் தேவை”, என அவர் கூறினார்.

தொடர்ந்து, கல்வியிலும் இந்தியர்கள் சிறந்து விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கல்வி ஒன்றே ஒரு சமூகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் ஆயுதமாகும், ஆகவே, கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளியுங்கள் எனவும் பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • காமராசன். wrote on 12 ஜூலை, 2017, 8:45

  அண்ணே நீங்கள் இப்படி சொல்லும்போதே தெரிகிறது ‘அது’ நிஜம் தான் என்று. கடந்த அறுபது ஆண்டுகளாக நாங்கள் இப்படிப் பட்ட நிஜங்களை நிறையவே பார்த்துப் விட்டோமே.. அதிலும் குறிப்பாக தேர்தல் திருவிழா தடங்கும் சமயங்களில்… நீங்க ரொம்ப ஒன்னும் செய்ய வேணாம். இருக்கவே இருக்கு ஒரு கேன் கின்னஸ், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, அரை கிலோ ஆட்டிறைச்சி…அது போதுமே…அதைக் கொடுத்தா நாங்க உங்க கட்சிதான். இது உங்களுக்கு தெரியாத என்ன..

 • en thaai thamizh wrote on 12 ஜூலை, 2017, 13:54

  நம்பிக்கை நாயகன் அல்தான் தூயா — மனசாட்சி இல்லாதவன். பொய்யும் பித்தலாட்டமும் உடன் பிறப்பு .

 • s.maniam wrote on 13 ஜூலை, 2017, 18:10

  வியாபார நுணுக்கங்களை தெரிந்து கொள்ள , ” BLUE OCEAN STRATEGY ”
  எதிர்கால வியாபார ஜாம்பவான்களை உருவாக்க
  !! இந்திய சமூக மேம்பாட்டுக்கு ” MALAYSIAN INDIAN BLUEPRINT ” திட்டங்கள் முழுமை பெற்று செயல் பட தொடங்கினாள் நமது எதிர் காலம் ஒளிமயமானதாக இருக்கட்டும் !! எதிர் மறை சிந்தனைகளை விட்டு இந்த திட்டங்கள் முழுமை பெற நாம் அனைவரும் இதில் சம்பந்த பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவோம் !!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: