சிங்கப்பூரில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

PMleeநேற்று, சிங்கப்பூர் பேச்சாளர் சதுக்கத்தில் சுமார் 400 சிங்கப்பூர் மக்கள் கூடி பிரதமர் லீ ஹிசியன் அதிகார அத்துமீறல் குறித்து விசாரிக்க ஒரு சுயேட்சை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இவ்விவகாரம் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் லீ குவான் இயுவின் வீடு சம்பந்தமாக இன்றைய பிரதமர் லீ ஹிசியன் மற்றும் அவருடைய உடன்பிறப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைக் குறிக்கிறது.

“சிங்கப்பூர் சிங்கப்பூர் மக்களுக்குச் சொந்தமானது, லீ குடும்பத்திற்கு அல்ல”, என்ற வாசகத்தைக் கொண்ட பதாகை பேச்சாளர்கள் சதுக்கத்தில் கட்டப்பட்டிருந்தது.

அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதை ஒரு கண்துடைப்பு என்று கூறுகின்றனர்.

இதில் அதிகார அத்துமீறல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இதைக் கூறுகிறவர்கள் பிரதமரின் உடன்பிறப்புகள் என்று ஒரு வணிகரும் அரசியல் ஈடுபாடுள்ளவருமான ஓஸ்மான் சுலைமான் கூறினார்.

இக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த விவகாரத்தை சுயேட்சையாக விசாரிக்க ஓர் அதிபர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.