படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்! இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை


படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்! இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

dhok lamஎல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த பகுதி நம் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் இந்திய இராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது கடுங்கோபத்தில் உள்ளது.

இந்த பதற்றம் காரணமாக, அந்த எல்லையில் இரு நாட்டு படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. படைகளை திரும்ப பெற இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்தன.

இந்த விவகாரத்தில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதை காட்டிலும் தூதரக ரீதியிலான பிரச்சினையையே இந்தியா விரும்புகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஷின்ஹுவாவில், எல்லை பிரச்சினையில் பேசி தீர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை.

டோக்லாமில் எல்லை தாண்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளை இந்தியா திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இந்தியா கடும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.

சீனாவை பொறுத்தமட்டில் எல்லை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய சூழல் அப்படியே இருக்கும் என்றோ அல்லது கடந்த 2013 மற்றும் 2014ல் லடாக்கில் நடந்த எல்லை பிரச்சினையை போன்றது என்றோ இந்தியா கருத வேண்டாம்.

பொதுவாக எல்லைகளில் பிரச்சினை ஏற்பட்டால் தூதரக ரீதியிலான தீர்வே பெரும்பாலும் நடைபெறும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள விவகாரம் முற்றிலும் மாறுபட்டது என்று ஷின்ஹுவாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 -tamilwin.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: