உடல் எடை குறைக்க: அடிக்கடி இந்த காய் சாப்பிடுங்கள்

suraikaiசுரைக்காயில் விட்டமின்கள், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • சுரைக்காயில் நீர்ச்சத்து மற்றும் அதிகளவு நார்சத்து உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள் அடிக்கடி சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், அது செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
  • சுரைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, மலச்சிக்கல், வாயுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • உணவில் சுரைக்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.
  • முற்றிய சுரைக்காயை சாப்பிடாமல், சற்று இளம் பிஞ்சான சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

-lankasri.com