சாலே: எம்ஆர்டி, மக்களுக்குப் பிரதமரின் பரிசு

BAJET 2017 / MRTஎம்ஆர்டி   பெருஞ்  செலவில்  அமைந்த   திட்டமாக    இருக்கலாம்   ஆனால்,  அது  மக்களுக்கான   திட்டம்    என்கிறார்   தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்   சாலே  சைட்  கெருவாக்.

51 கிலோமீட்டர்   நீளம்  கொண்ட   எம்ஆர்டி  சுங்கை  பூலோ – காஜாங்   சேவையினால்   நாள்தோறும்   400,000  பயணிகள்   பயனுறுவர்    என   அமைச்சர்  அவரது    வலைத்தள்மான   sskeruak.blogspot.my-இல்   பதிவிட்டிருந்தார்.

தன்னுடன்   ஒத்துப்போகாத   ஒரு   மாநிலம்   என்றாலும்  அரசாங்கம்  அம்மாநிலத்தில்   இத்திட்டத்தை   மேற்கொண்டது    அது   மக்களின்   வசதிக்கு   முன்னுரிமை   அளிக்கிறது   என்பதற்கு   நல்ல   சான்றாகும்    என்றாரவர்.