மாற்றுத் தலைமை காலத்தின் தேவை; விக்னேஸ்வரன் மறுத்தல் இன்னொரு தலைமை தேடுவோம்: சுரேஷ்

suresh_premachchanthiran_001தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் மாற்றுத் தலைமை காலத்தின் தேவை என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“தற்போதையை சூழலில் சரியான பாதையில் செல்வதற்கான தலைமையை ஏற்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தயங்குவாரானால், இன்னொரு தலைமையை அல்லது கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்கு பின்நிற்க மாட்டோம். ஏனெனில், மாற்றுத் தலைமை காலத்தின் தேவை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மாற்றுத் தலைமையை வழங்கக் கூடியவர்கள்- அந்தச் சக்தி உள்ளவர்கள் மக்களை அரவணைத்து, அவர்களின் பிரச்சினைகளைக் கையாளக்கூடிய தலைமைத்துவதத்துக்கு வரமுடியும். இவை மக்களின் கைகளில் இருக்கின்ற விடயம். மாறாக தனிநபர் தீர்மானிக்கும் விடயங்கள் அல்ல.” என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-puthinamnews.com

TAGS: