அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா திடீர் போர் ஒத்திகை! எதிரி விமானங்களை அழித்தும் பயிற்சி!

india china boderஇடாநகர்: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீனா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறது. எதிரி விமானங்களை எப்படி அழிப்பது என்பது தொடர்பான பயிற்சியையும் சீனா மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூடானின் டோக்லாம் பீடபூமியில் பதற்றம் தொடருகிறது. டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என சீனா மிரட்டி வருகிறது.

ஆனால் டோக்லாமை சீனா ஆக்கிரமித்தால் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி பிராந்தியத்துக்கு ஆபத்து என்பது நமது ராணுவம் சீனாவை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 11 மணிநேரம் இந்த போர் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தின் கூட்டுப் படையினர் இப்போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கின்றனர். எதிரி நாட்டு விமானங்களை எப்படி வீழ்த்துவது என்பது தொடர்பான போர் ஒத்திகையும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

tamil.oneindia.com

TAGS: