கைரி ஜமாலுடின்: தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் அரசியல் திண்மை இருக்கிறதா?


கைரி ஜமாலுடின்: தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் அரசியல் திண்மை இருக்கிறதா?

 

KJtoabolishvschoolsதாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும். நாட்டில் ஒற்றுமையை வளர்க்க இது ஒரு பிரபலமான கருத்து. ஆனால், தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் திண்மை அரசியலிலுள்ள யாருக்காவது உண்டா என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பாக்கர் கேள்வி எழுப்பினார்.

அது ஒரு சிறந்த குறிக்கோள், ஏனென்றால் ஒற்றுமையின் ஒரு கூறாக அனைவரும் ஒரே பள்ளிக்குச் செல்கிறார்கள்…ஆனால், அது கடினமானது என்று கைரி கூறினார்.

தற்போதைய அரசியல் களத்தின் இருதரப்பினரில் எவரும் இதைச் செய்வார்கள் என்று நான் எண்ணவில்லை என்று பெட்ரோனாஸ் பணியாளர்கள் இன்று கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு டிஎன்50 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகையில் கைரி கூறினார்.

இது பொதுமக்கள் அவர்களுடைய 2050 பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு புத்ராஜெயா தொடர்ந்து நடத்தி வரும் டிரான்ஸ்போர்மாசி நேசனல்50 (டிஎன்50) கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகும். ஆனால், இது தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சுமார் 250 பெட்ரோனாஸ் பணியாளகளுக்கு மிக விருப்பமான கருத்தாகக் காணப்பட்டது.

பங்கேற்றிருந்தவர்களில் அஸ்லான் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தாம் ஓர் ஒன்றுபட்ட மலேசியாவை உணர்வுப்பூர்வமாக விரும்புவதாகவும், அதனை நாம் அடைவதற்கு தற்போதைய தாய்மொழிப்பள்ளி அமைவை ஒழித்துக்கட்டி விட்டு அதன் இடத்தில் ஒரு தேசியக் கல்வி அமைவு முறையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மலாய்மொழி மட்டும் போதிக்கும் பள்ளிகளின் நிலை?

பெட்ரோனாஸ் பணியாளர்களில் ஒரு பகுதியினரும் இது போன்ற விருப்பத்தைத் தெரிவித்தனர்.

2050 இல், ஒரு தேசியப்பள்ளி அமைவுமுறையின் கீழ் குழந்தைகள் ஒன்றுபடுத்தப்பட்டு, முழுமையாக்கப்பட்டு இருப்பதைக் காண விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களிடம் தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் கருத்தை ஆதரிக்கிறீர்களா என்று கைரி கேட்டார். அதற்கு அங்கிருந்த பெரும்பாலானோர் தங்களுடையக் கைகளை உயர்த்திக் காட்டினர்.

1987 இல், எப்படி சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயு ஆங்கிலமொழி தேசியப்பள்ளிகளுக்கு ஆதரவாக தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டினார் என்பதையும் அதனால் தாம் கவரப்பட்டதாகவும் கூறிய கைரி, அது போன்ற கொள்கைகளை மலேசியாவில் அமல்படுத்துவதிலுல்ல சிரமங்களை எடுத்துரைத்தார்.

தாய்மொழிப்பள்ளிகளை மூடுங்கள் என்று நீங்கள் கூறிய அடுத்த கணமே, மற்ற தரப்பினர் உங்களுடைய முற்றிலும் தங்கிப்படிக்கும் மலாய்ப்பள்ளிகளின் நிலை என்ன என்று கேட்பார்கள் என்று கூறிய கைரி, “நியாயப்படி, அது போகத்தான் வேண்டும். அது சமூக ஒப்பந்தத்தை மீண்டும் எழுதுவதாகும். அது பெரிய விசயம். அதற்கு நாம் தயாரா?”, என்று கேட்டார்.

இக்கேள்விக்கு மௌனம்தான் பதிலாக இருந்தது.

 

 

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • நாம் தமிழர் டெங்கில் wrote on 18 ஜூலை, 2017, 8:58

  வணக்கம். சிங்கப்பூரில் இங்கு உள்ளது போல் பூமிபுத்ராகளுக்கு உள்ளது போல் தனியாக பல்கலைக்கழகம் இல்லை. இது இந்த மரமண்டைகளுக்கு புரியவில்லையா.

 • iraama thanneermalai wrote on 18 ஜூலை, 2017, 9:06

  இப்பொழுது படிக்கும் அனைத்து மாணவர்களும் .மற்ற அனைவரும் பூமி புத்தராக்களே அவர்களில் வேறுபாடு இல்லை என்ற நிலை உருவானால் அவர் கூறுவது சாத்தியம் /
  மலாய் சமூகம் இதை ஏற்குமா?

 • குமார ராஜா wrote on 18 ஜூலை, 2017, 9:45

  நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் (தாய்மொழிப்பள்ளிகள்) வளமாக இருந்த காலத்தில் நாட்டுமக்கள் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள் என்பதை ஒத்துகொள்ள முடியுமாடா உன்னால்?

 • மு.ப.கரிகாலன்  wrote on 18 ஜூலை, 2017, 10:15

  கைரி ஜமாலுடின் ஒரு கட்டின முடடாள்.ஒரு அமைச்சன் என்ற முறையில் தீவிரவாத கருத்தைக் கொண்ட ஒரு கேள்வியை அந்த பெட்ரோனாஸ் கூடடத்தில் முன் வைத்திருக்க கூடாது.மலாய்க்காரர்கள் மட்டும் கூடிய கூடடத்தில் அப்படிப்பட்ட கேள்வியை முன் வைத்தால் எந்த மலாய்க்காரன்தான் கை தூக்கி ஆதரவு தெரிவிக்கமாடடான்.இதுகூட ஒரு அமைச்சனாக இருப்பவனுக்கு தெரியவில்லையே.ஆரம்ப பள்ளியிலிருந்து தொழில்நுட்ப்ப மற்றும் பல்கலைகழகங்கள் வரை மலாய்காரர்களை மட்டுமே கொண்ட கல்வி நிலையங்கள் செயல்படும்போது தாய்மொழி பள்ளியை மட்டும் துடைத்தொழிக்க முயல்வது இனவாத தன்மைதான் வெளிப்படுத்துகிறது.மகாதீர் காலத்தில் வளர்த்து விடப்படட இந்த இனவாதிகளைத்தான் முதலில் துடைத்தொழிக்க வேண்டும்.இவர்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானவர்கள்.

 • [email protected] wrote on 18 ஜூலை, 2017, 11:45

  சிங்கப்பூரை போல தேசியமொழி ஆங்கிலத்தை முதல் மொழியாக அணைத்து மலேசியா பள்ளிகளிலும் பயன் படுத்தி, மலாய் சீனம் தமிழ் மொழிகளை இரண்டாம் தேர்வுமொழியாக (ஒரு பாடமாக மட்டும்
  )
  கற்றுக்கொடுக்க அரசாங்கம் இணக்கம் தருமானால் எங்களுக்கு சம்மதமே ! சொந்தமொழி இல்லாத மாற்றமொழிகளில் இருந்து திருடி மலாய் மொழியென உருவாக்கி அதனை அனைரும் கற்றால் , பேசினால் , பயன்படுத்தினால் ஒற்றுமையை வளர்க்கலாம் என அறிவில்லாத இந்த இலஞ்சம் வாங்காமல் வாழ்க்கையை போற்றமுடியாத இந்த மனித ஜென்மங்களுக்கு நாம் தலைவணங்க தேவையில்லை . நம்மொழியை வளர்ப்போம் , நம்மொழியை காப்போம் . வாழ்க தமிழ் வளர்க நம்மொழி .

 • angamuthu Vethachalam wrote on 18 ஜூலை, 2017, 13:41

  பூமிபுத்திரா என்ற முத்திரையை குத்திக்கொண்ட நீங்கள் இந்தியர்களுக்கு ஏன் பூமிபுத்ரா அந்தஸ்தை கொடுக்க மறுக்கிறீர்கள்? நாங்களும் இந்த நாட்டில்தான் பிறந்தோம்!எங்களுக்கு உரிமை இல்லையா?

 • Dhilip 2 wrote on 18 ஜூலை, 2017, 14:41

  எங்கே போச்சு இந்த மானங்கெட்ட மா இ கா ?

 • குமார ராஜா wrote on 18 ஜூலை, 2017, 16:56

  அங்கமுத்து வேதாச்சலம்….இதே கேள்வியை மானமுள்ள இந்தியர்கள் அனைவரும் ஓட்டுக்கேட்டு நம் வீட்டுக்கு வரும் வேட்பாளர்களிடம் கேட்க வேண்டும். அவன் ம.இ.கா காரனோ…பாரிசான் காரனோ எதிரணிக்காரானோ எவனாக இருந்தாலும் நான் கேட்பேன். ம.இ.கா காரனிடம் கூடுதலாக ஒன்று கேட்பேன்…கடந்த 5-ஆண்டுகாலத்தில் எந்த ஆணியை பிடுங்கினான் என்று.

 • கயவன் wrote on 18 ஜூலை, 2017, 17:35

  தமிழர்களே தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவதில்லை.

 • s.maniam wrote on 19 ஜூலை, 2017, 18:00

  ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரை தமிழ் பிள்ளைகள் தமிழை கற்பதில் எவனுக்கு என்ன நஷ்ட்டம் என்ன வயித்தெரிச்சல் ! படிவம் ஒன்றுக்கு செல்லும்போது கட்டாயமாக தமிழ் பள்ளி பிள்ளைகளும் அரசாங்கத்தின் இடைநிலை பள்ளிக்கு தானே சென்றாக வேண்டும் ! மலாய் மனவர்களுடனும் மற்ற மொழி மாணவர்களுடனும் தானே கல்வி பயில வேண்டும் ! தமிழை ஒரு பாடமாகத்தானே எடுத்தாக வேண்டும் தமிழ் பள்ளி மாணவர்கள் !! தமிழ் பள்ளி மாணவனும் அரசாங்க பல்கலைக்கழகமோ , தனியார் பல்கலைக்கழகமோ மற்ற இன மாணவர்களோடுதானே கல்வி பயில வேண்டும் ! தமிழ் பள்ளிமாணவர்கள் தனியார் நிறுவனங்களிலும் ! அரசாங்க பணிகளில் உயர் அதிகாரிகளாக அமர்த்தப்படும் போது , அரசாங்க ஆவணங்களை தமிழில் தயாரிப்பதில்லையே ! ஆறு வருட தமிழ் கல்வி உத்தியோகத்தில் பயன் பாடு இல்லை என்றாலும் !! எங்கள் இனம் காக்க பட ! எங்கள் தாய் மொழி தமிழை கட்றே தீரவேண்டும் !! நட் பண்புகளை கற்று தரும் தமிழ் ! வாழ்வில் நல் வழியில் வாழ நம்மை செம்மைப்படுத்தும் தமிழ் !! தமிழன் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழ தமிழ் கல்வி இன்றியமையாத ஒன்று !! தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா ! தேவை இல்லை பூமி புத்ரா ஸ்டேட்டஸ் !! யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்த நாட்டில் பிறந்த அத்துணை தமிழனும் இந்த மண்ணின் மைந்தன் தான்! இதை எவனாலும் மறுக்க முடியாது !!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: